Saturday, 28 December 2013

புத்தாண்டு

வானம் தன்
      வர்ணனையை கூட்ட
பெற்றுக் கொண்டது
      பெண்மையின்
கண் இமையோரா
      மையினை...!

தென்றல் தன்
      தனலினை குறைக்க
சுமந்து கொண்ட
     ஈரப்பதம்...!


திங்கள் தன்
      முகப் பொலிவினை
ஏற்றிக் கொள்ள
      ஏற்றுக் கொண்ட
சுரிய வெளிச்சம்...!

நீர் தன்னில்
      நிலைக்க நினைத்த
தூய்மைக்கு
    துணை கொண்ட
மூலிகையின்
     தழுவல்...!

நெருப்பு தன்
      வெப்பம் தணிக்க
நிரப்பி விட்ட
     நீர்திவளைகள்...!

நிலம் தன்னை
      நிந்தித்தவரையும்
நேசிக்க கற்று கொண்ட
     நிலையான மௌனம்...!

புதிதாய் பிறக்கட்டும் நம்மில் இப் புத்தம் புது ஆண்டில்....

பூக்களிடம்
     பெற்றுக்கொண்ட
முக மலர்ச்சி...!

புத்தம் புது
      நீருற்றில் எடுத்திருந்த
புத்துணர்ச்சி...!

நல்லவையே நடக்குமென்ற
     நம்பிக்கையை  கூட்டுகின்ற
நணயத்தின் ஒரு பக்கம்...!

பிழை அறியா
      மழலையின் மனம் கானும்
சந்தோசம்...!

தன் பழமையை மட்டும்
     தோற்கடிக்க தயங்காமல்
ஏற்றுக் கொள்ளும்
     மாற்றங்கள்...!

முடிவில்லா ஏற்ற
      இறக்கங்கள் நம்மை
தொடர்ந்தாலும்
      தொலைக்காத நம்
முன்னேற்றப் பாதை...!

இனிய புத்தாண்டு நல்வழ்த்துகள்........

Tuesday, 24 December 2013

சேருமிடம்

மலர்களின் வாசனையை
     சுமந்து கொள்ளும்
மண்ணில் விழுகின்ற
      மழைத் துளி...!

பனி விழுந்த
       பின்னும் விடியாத
வானிலையில்
       வண்ணத்துப் பூச்சியின்
உடல் ஒட்டியிருந்த    
      மினுமினுப்பு...!

தென்றலின் தழுவளில்
       தனை மறந்து
இசை மீட்டும்    
       உதவாதென
விட்டு ஏறியப்பட்ட
       உடைந்து போன
 மூங்கில்...!

Saturday, 14 December 2013

கண்டெடுக்காத


அவன் கல்லறையின்
     மீதிருந்த ஒற்றை
ரோஜா கூறிற்று
     அவன் இறப்பின்
ரகசியத்தை...!

அவன் உறவுகளின்
      விழி வழியே
வழிந்திருந்த
       கண்ணீர் காட்டியது
அவன்
      கண்டெடுக்கா  அன்பின்
ஆழத்தை...!

உறவுகளின்
     வறையரையை விட
அன்பு உயர்ந்தது - அது
      கிடைக்குமிடம்
எதுவானாலும்..!

Wednesday, 11 December 2013

உலகம்

மென்மையான ஸ்பரிசமும்
      மெல்லிய சுவாசமும்
வாழுகின்ற போராட்டத்தில்
      சிதைந்து போகும்
சித்திரக் கூடம்...!

ஏற்ற இறக்கங்கள்
       எதுவானாலும்
சமத்துவத்தில்
       சரிந்து போகா
சோதனைச் சாலை...!

ஆணவங்கள் அழிந்துபோயி
      அன்பினில் மட்டும்
வாழுகின்ற
      வரம் தந்த
அன்னையின் ஆலயம்...!

சரித்திரங்களும்
      சாம்பலாகும்
சத்தியமும் சகதியில்
      நிருத்தப்படும்...!

இவ்வுலகம் மட்டும்
      கற்பனைக்கு எட்டாத
காலமாற்றத்தின்
      கலங்கரை விளக்காய்...!

Thursday, 5 December 2013

வறுமை

உதிர்ந்து விட்ட
     விண்மீண்களை
கோர்க்க வந்த
     மின்னல் ஒளி...!

ஊர் உறங்கும்
    வேளையிலும்
குடை பிடித்த
     கரு மேகம்...!

கண்ணிமை இமை
     தொட்டுச் சென்ற
குளிர் காற்று - அங்கும்
     கந்தல் உடை
அணிந்து வந்த
     சிறுவன்...!

காணுமிடமெங்கும்
      காற்று முழுவதும்
நிறைந்துவிட்ட
      கருணை - நம்
நெஞ்சில் நிலைத்து
      நிற்கா கொடுமை...!

Saturday, 30 November 2013

புதுமை

புதிதாய் மலர்ந்திருந்த
      மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!

மண்ணுக்குள் மூச்சிமுட்டி
       புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!

வீசுகின்ற புயல் காற்றில்
        கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!

புதிதாய் பொங்குகின்ற
       நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!

Monday, 25 November 2013

வீரம்

பிறந்தது
      சதை பிண்டமானாலும்
வாள் கொண்டு
      கிழித்து புதைத்த
மரபு...!

உடன் பிறப்புகளின்
      உதிரம் சிதறினாலும்
உணர்வுகளில்
       உதிக்க மறந்துவிட்ட
வீரம்...!

கலங்கமற்ற தாயின்
       வாழ்வினை
கல்லிலே செதுக்கிட
       கங்கை வரை
களம் கண்ட
      வரலாறு..!

கலங்கிய பெண்மையின்
      வழக்கிலும்
வறண்டு போன
      நம் உதிரத்தின்
கொதிப்பு...!

Monday, 18 November 2013

முத்தொழில்

மூன்று முகம்
     கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
      உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
      உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
      மனித கூட்டம்...!

Friday, 15 November 2013

ஆற்றுப்படுகை

ஆசையென்னும் கயிறு
      கொண்டு இழுத்து சென்ற
வென் புனல் - அதன்
      ஆணவத்தில்
விட்டு சென்ற - இதன்
       வளர்ச்சியென்னும்
வண்டல் மண்...!

எல்லையோரத்தில்
      எழுந்து நின்ற
ஆறு-கால் மண்டபம் - அங்கு
      அறைகுறையாய்
வரையப்பட்டிருந்த
      வள்ளுவரின் வரைபடம்...!

கரையெங்கும் வனப்பினை
      கூட்டியிருந்த
நீலப் பசும் பாசி - அங்கும்
      உதிர்ந்துவிட்ட சிறகென 
சிதைந்து கிடந்த
      சிறுவனின் அட்டைக் குடில்...!

கடந்து விட்ட
        மழை வெள்ளத்தில்
சிதிலம் சிதிலமென
      சிதைந்திருந்தும்
சிவன் சூடியிருக்கும்
       பிறை நிலவாய் - இவ்
ஆற்றுப்பதுகை...!

Monday, 11 November 2013

உறவுகளின் நெருக்கம்

உதடுகளில் உதிக்கின்ற
      சொற்களையும்
உள்ளத்தில் விரிகின்ற
     சுயத்தினையும்
குறைக்கின்ற துரமாய்
     இவ் உறவுகளின்
நெருக்கம்...!

தாங்கிய கரங்களை
       துளைக்காத
தடுமாறிய கால்களின்
      துணைக்கான
தோன்றலில் உணருகின்ற
     இவ் உறவுகளின்
நெருக்கம்...!

Wednesday, 6 November 2013

காவிரி டெல்டா

வற்றாத நதிமகளின்
       வளத்தினில் வளர்ந்திருந்த
நெற்கதிர்கள்
       வானுயர புல்லாங்குழலாய்
கானம் இசைத்திருந்த
       மூங்கில் தோட்டம்..!

துள்ளிக் குதித்தோடும்
       முயல் தூவிச்சென்ற
வர்ண ஜாலம்
        எட்டாத  குடைக்குள்ளே
கசிந்து வந்த
         வெண் மழைச் சாரல்...!

ஒண்டிக் கொள்ள
        குடிசையில்லாத துரத்தில்
அல்லி வீற்றிருந்த
         தாமரைக் குளம்...!

பாதிகால் நனையாது
       பாய்ந்திருந்த தண்ணீர் - அங்கே
பயந்து பயந்து
        நீந்திச் சென்ற
கெண்டை மீின்...!

பாதி வயிறு  நிறைய
      சேறு மிதிக்கின்ற
மனிதக் கூட்டம்
     அங்கேயும்
சோர்வு தெறியாமலிருக்க
      பாடி வந்த கானம்...!

Sunday, 27 October 2013

ஈர்ப்பு விசை

Gravity என்னும் படம் உண்டாக்கிய சிதறல்...

மண்ணில் வாழ்வதே
       சொர்க்கம் என்றது
விண்ணில் வாழ்ந்துவிட்ட
       வாழ்க்கையில்...!

இருக்க இடம் தேடி
      கொட்டிய கோடிகள்
போதுமென்றது
      இருப்பதே
அன்பினில் உருவான
      கருவறை
என்று சொல்லி...!

Saturday, 26 October 2013

மின்னல்

இமைக்கின்ற நொடிப்
      பொழுதில்
நிழல் விழுகின்ற
     தூரத்தில்...!

மண் கரைக்கும்
      மழை மேகம்
ஏற்றுக்கொண்ட
      மோதலுக்கு
எடுத்துவிட்ட நிழற்ப்பட
      ஒளியாய்...!

Friday, 25 October 2013

மறதி

அருகிலிருக்கும்
      சுரிய ஒளியில்
மறைந்து போகும் - அந்
      நட்சத்திரக் கூட்டம்...!

அள்ளி அனைக்கின்ற
       தாயின் அன்பில்
மறந்து போகும் - இவ்
       எத்தனை நெருடல்களும்...!

Monday, 21 October 2013

ஒற்றுமை

நேசமில்லா உறவுகளின்
      நெருக்கமும்
வாசனையில்லா மலர்களின்
      மென்மையும்
ஒன்றுதான்...!

ஒன்று அருகிலிருந்தும்
       ஆதரவற்றது
மற்றொன்று
       மகரந்தம்
சேர்க்கா மலடுகள்...!

Saturday, 19 October 2013

சுதந்திரம்

புதிதாய் பிறந்துவிடு
       தோல்வி உன்னை
அரவணைக்கையில் - இல்லையெனில்
       உலகம் உன்னை - அங்கேயே
புதைத்ததுவிடும்...!

அவநம்பிக்கையில்
     வாழுகின்ற
பயணத்தை விட
     நம்பிக்கையில் நடக்கின்ற
கனவுகள்
     கலங்கமற்றது...!

ஏற்றுக் கொள்பவை
      உறவாகட்டும்
எதிர்க்க நினைப்பவை
      உடல் பிரியட்டும்
இப்பயணத்தின்
     சுமை குறைத்திட...!

சுடுமணலில்
      நடக்க சொல்லும்
சுற்றத்தை விட
     சுதந்திரத்தின் உறவுகள்
சுகமானது...!

Monday, 14 October 2013

இருப்பவை

வண்ணங்களின் இருப்பதில்லை
       இவ்-வாழ்வு - அது
வளமான மனதினில்
       வளர்ந்து நிற்பது...!

நிரப்பி விட்ட
      பொருட்களில் இருப்பதில்லை
இச்-சந்தோசம் - அது
      நிரைவான மனதினில்
புகுந்து கொண்டது...!

போட்டியிட்ட
      பாதையில் இருப்பதில்லை
இந்-நிம்மதி - அது
      போற்றுகின்ற உறவினில்
உறைந்திருப்பது...!

அடுக்கிவைத்த
      எதிர்பார்ப்பினில் இருப்பதில்லை
இவ்-அன்பு - அது
      ஆதரிக்கின்ற
அணுக்களின்
       ஆரம்பப்புள்ளி...!

Saturday, 12 October 2013

வறையரையில்லா

மூன்று நாள்
     பெய்திருந்த மழையில்
முல்லை நிலத்தின்
     வனப்பு...!

மழை வெயில்
      சேர்கின்ற வேளையில்
உடல் சிலிர்க்கும்
      வெண் புறாக்கள்...!

உள்ளிருந்து உதித்து
      வெண்மேகத் தோணியில்
வலம் வருகின்ற
      வெண்ணிலவு...!

மூவாயிரம் ஆண்டுகள்
      உயிர் வாழுகின்ற - என்
தாய் மொழியான
      தமிழ்...!

என்றுமே நீங்கள்
      அழகுதான் - எங்கள்
இளமையென்னும்
      வரையறையில்லாமல்...!

Saturday, 28 September 2013

பருவ காலம்

மீதமான மின்னொளியில்
       புதுமையின் துளிர்தளும்
புன்னகைக்கும் பூக்களை
        சுமந்திருந்த
எல்லோரா ஓவியமாய் - இவ்
       இளவேனிற் காலம்...!

மெருகேறியவன் மேனியின்
       தக தககப்பில்
கொடுத்தவன் பரிக்க
      வறண்டு போய்
தாகம் ஏற்றுக்கொள்ளும்
       தவிப்பாய் - இக்
கோடை காலம்...!

கார் மேகத்தின்
      கருணை - அதில்
விழுகின்ற கண்ணீரில்
      கானகமும்
செழிக்கின்ற
      கார் காலம்...!

பிரிவினை என்றாலும்
      உலகத்தின் நியதியால்
சருகுகள் பிரிகின்ற
      சத்தியத்தின்
சோதனையாய் - இவ்
      இலையுதிர் காலம்...!

அருகிலிருக்கும்
     அருகம் புல்லும்
முகம் மூடி
       ஜொலிக்கின்ற
முன் பனிக் காலம்...!

முற்றத்தில்
        வீற்றிருக்கும்
 துளசியின்
         தளிர்ச்சிக்கு
மென் பனி துவிய
         பின் பனிக் காலம்...!

Thursday, 26 September 2013

பிஞ்சுத் தடங்கள்

 பிழைகள் நிறைந்திருந்த
         பிள்ளை காலம்
கனிவானது - இந்த
         உயர்ந்துவிட்ட
கள்ளத் தனத்திற்கு...!

நெருங்கி நின்ற
       நெருப்பு கூட
இருந்ததில்லை
        பயமென - இப்
பதுங்கி வாழவேண்டிய
    பாசறைக்கு...!   

சந்தோசம் மட்டும்
    ஏந்தி நின்ற  
நடுக்கமில்லா நட்பில்
    ஊர் உறங்கும்
வேளையிலும்
    உழைப்பினில்
 உருவான மரக்கூடு
    கான சென்ற ஞபாகம்...!

ஒவ்வொரு நாளும்
      உணர்வுகளில் தோன்றி
மறியும் தேடலாய் - இப்
       பிஞ்சுத் தடங்களின்
பதிவு -  என்    
        பாதை வழி
  சிதறிய   முத்துக்களாய்...!

Friday, 13 September 2013

பட்டறிவு

வாழ்வு வாழக்
      கற்றுக் கொடுக்கிறது
வலுவற்ற பகுதியினை
      வலுவாக்க...!

ஏற்ற இறக்கங்களில்
       இதய நரம்பின்
துடிப்பினில் தூண்டப்பட்ட
       உற்ச்சாகமும்
உதவுகின்ற  
    சீிரமைப்பும்...!

மீண்டும் மீண்டும்
       இது மீள்வினையே
மீளுகின்ற தன்மை
        நம்மில்
நிலைக்கும் வரை...!

Wednesday, 11 September 2013

பறவைகள்

பொங்குகின்ற நீறூற்றில்
       முகம் பார்க்கின்ற
வெண் புறா
       வெடுக்கென நீர்
எடுத்துச் சென்ற
       கருப்புருவம்...!


வில்லேந்தி ஓடிய
       வேடன் - விடிகின்ற
வேளையில் கானம்
       பாடி நின்ற குயில்...!


கூண்டுக்குள்ளே வைத்தாலும்
       கொஞ்சு தமிழ்
பேசுகின்ற பிள்ளை
       குறைவுடன் இருந்தாலும்
நிறைவினை எடுக்கின்ற
       அன்னம்...!


விடியலை வரவேற்று
       கொக்கரிக்கின்ற சேவல்
செவ்வானம்
       சிவக்கின்ற வேலையில்
தோகை விரிக்கின்ற
        மயில்...!

Thursday, 5 September 2013

ஆசான்

அன்னை என்ற
     வார்த்தை சொல்ல
அடிமனத்தில்
     விட்டு சென்ற
அன்பு மொழி
     வார்த்தை...!

கரையில்லா ஆடை
     கசங்காது
உடுத்தக் கற்றுக்
    கொடுத்த
நடத்தை...!

ஏழு மாடி
     கட்டிடம் இல்லாவிட்டாலும்
எழுந்து நின்ற
     அரச மரத்தில்
எழுதி சென்ற
      வீரனின்
வாள் முனையில்
      ஓட்டியிருந்த  நம்பிக்கை...!

தொடங்கிய வாழ்வின்
      தொடக்கப் புள்ளி
எங்கள் ஸ்பரிசத்தில்
     மண்ணின் உணர்வுகளை
விட்டு சென்ற
     ஒற்றை அகல் விளக்கு...!

Saturday, 31 August 2013

முதல் இரயில்

மூடிய முகம்
     காட்டி  சிரிக்கின்ற
சிறு குழந்தை
     மின்னல் ஒளியில்
முகமறைக்கின்ற
      தாய்...!

ஓடையில் ஒய்யாரமாய்
     பயணிக்கின்ற நிலவு
ஓடுகின்ற பாதையில்
      உருக்குலைந்திருந்த
மண் குதிரை...!

வானத்தின் வனப்பினை
      வாசலாக்கிய
தென்னையின் இணைவு
      கண்ணில் விழுகின்ற
கலையழகு பிம்பமாய்
      வீதியெங்கும்
விதைக்கப்பட்ட
      விடி விளக்கு...!

விட்டு விட்டு பொழிகின்ற
      வானிலை - இங்கே
வாழ்ந்திருந்த
      உணர்வுகளில்
உணரப்பட்ட
    மண்வாசனை...!

இருபுறமும்
     சூழ்ந்திருந்த இருளினை
அலங்கரிக்கும்
      விளக்காய்
நட்சத்திரக் கூட்டமிருக்க 
      சாரைப் பாம்பென
விரைந்திருந்த
     மின்தொடர் வண்டி -...!

Friday, 30 August 2013

புல்வெளி

முன்பனியில் முகம்
     புதைத்த முல்லை - அங்கே
முகம் காட்டும்
     கதிரவனின்
கனல் குறைத்த
    மூங்கில்...!

மிதக்கின்ற முகிலின்
    வேகத்தை குறைக்கும்
மலை முகடு - அங்கு
     ஆளுயற அணிகலனாய்
வரைந்திருந்த
     வானவில்...!

புன்னையில் உரங்குகின்ற
     முன்று நாமம்
சுமந்தவன் - சுழன்று
     காற்று அடித்தாலும்
அலைபாயாது ஓடுகின்ற
      ஓடை...!

அங்கும் இங்கும்
      ஆடித் திரிந்த
 பாட்டாம் பூச்சி - அங்கே
       ஆணவமும் அடிபணிய
நிறைவாய்
       நிலைத்திருந்த அமைதி...!

Saturday, 24 August 2013

வாழ்வு

துன்புருத்த நினைக்கின்ற
       சந்தோசம் தண்ணீரில்
மிதக்கின்ற சருகினில்
      வாழுகின்ற வாழ்க்கை...!

வாழுகின்ற வாழ்வு
     ஒறு முறைத்தான் - நாம்
ஓடுகின்ற பாதையும்
     ஒரு வழிதான்...!

எடுத்தது
      எடுத்ததாக இருக்கட்டும்
விடுத்தது
     விடுத்ததாக இருக்கட்டும்...!

எழுதி எழுதி
     அழிப்பதற்கு
வாழ்வு - இங்கு
    கரும்பலகையில்
எழுதுவதோ...!

அழிகிப்
      போகும் உடல்
அழிந்தாலும்
     அழியாத - நம்
ஆன்மாவில்
     எழுதுவது...!

Friday, 23 August 2013

சுத்திகரிக்க முடியா ?

ஐந்து நான்கு
        ஆண்டுகளின்
ஆளுமையில்
       அன்னையின் ஆதாரமும்
அடுக்கடுக்காய்
       குறைந்திருக்கிறது...!

வாரிசுகளை வாழ
      வைக்கும் போராட்டம்
வறுமைக் கோடுகள்
      வளர்ந்திருப்பினும்...!

தண்டனை அளிக்கா
       தவறுகள் தரித்திரமாகி
அடைந்துவிட்ட
       சுதந்திரத்தை
சுத்திகரிக்க முடியா - இவ்
      வெண்ணிற ஆடைகள்
நம் விடியளுக்கு
     வந்துவிட்ட  வறுமை...!

http://www.newslaundry.com/2013/08/hawala-logic/

Monday, 5 August 2013

பாதை

சுய சரித்திரத்தில்
      ஏற்றுக் கொண்ட
துறுப்புச் சீட்டுகளை
       துடுப்பாக்கி
சந்தோச சுவடுகளை
       நோக்கிய பயணம்...!

தொடக்க-முடிவு
       தெரியாவிட்டாலும்
தெளிந்திருந்த
       சுய ஒளியில்
பயணிக்கிறோம்
       பிறப்பிடத்தின்
புகழ்  போற்ற...!

பிறந்த குழந்தையின்
      பிறை நெற்றி
உடைந்தாலும்
       உடைந்து போக
நம்பிக்கையில்
       நடந்து வந்த
பிஞ்சுத் தடங்கலாய்
      மனிதத்தின்
வாழ்க்கைப் பாதை...!

Wednesday, 31 July 2013

ஆனந்தம்

அனைகட்டிய ஆயிரங்கள் 
        எதிர்த்தாலும்
அரவணைக்கின்ற
       ஆருயிர்களின் அன்பினில்
அகப்படுகின்ற
       அசைவு...!

தாறுமாறாய் ஓடுகின்ற
        பாதையிலும்
தத்தை மொழி கேட்டு
       துள்ளுக்கின்ற
தசை நார்களின்
       தன்னிச்சை இயக்கம்...! 

கோள் இங்கு
       கோளமாக படைக்கப் பட்டது
கோடிட்ட கொடுமைகள்
       இல்லாது இருப்பதற்கோ
தடையில்லா
      இசை வெள்ளமாய்
தவழுகின்ற - இப்
      பிள்ளைக்  குணத்திற்க்கு...!

Wednesday, 24 July 2013

விடியல்

இருள் விளகுகின்ற நேரம்
          அருகில் இருக்க
இமை விழிக்கின்ற தூரத்தில்
         விடை தெரியா சுழல்
விடை கேட்க வந்த
         விடியல் வரும் நேரம்…!

பார்வையிருந்தும் பயனில்லாது
         பயணம் இருக்க
நீடித்த வெளிச்சம்
         ஏற்ற வந்த - இவ்
விடியல் வரும் நேரம்…!

விடை கேட்க வந்த
         இருள் ஒலிகள் சந்தமாக
உறைப்பதற்க்கு ஒன்றுமில்லை
         உறங்கிய ஊர்
விழித்துத்துக் கொள்ளும் - இவ்
         விடியல் வரும் நேரம்…!

Monday, 22 July 2013

அனுபவம்

நேற்றுவரை
       நடந்ததென்ன
நாடகமோ!
      இன்று மட்டும்
நிஜமாக...!

காற்றினிலே
       கரைந்து வந்த
காவியங்கள்
       கற்பனையோ!
மனம் போகிற
       போக்கினை
தேர்வு செய்ய...!

நடந்தவை
      நடந்தவையே
பதிந்தவை
     பதிந்தவையே
பாதை மாறாத
      திடமிருக்கையில்...!

ஆரூடம் சொன்ன
       பிள்ளை மொழி
பொய்த்ததுண்டு
      அனுபவம்
பொய்த்ததில்லை...!

Thursday, 18 July 2013

முகவரியில்லா கடிதம்

கற்பனை.... நம்ம ஊரு அரசியல்வாதிக்கு....

மகுடமே சூட்டிக்
        கொண்டாலும்
மரித்துவிட்ட ஜிவனின்
        மரண தண்டனைக்கு


நீ  - என்னிடம்

       ஆயுள் கைதி...!

                               இப்படிக்கு,
                                  மன சாட்சி.....

Saturday, 13 July 2013

முதியோர் இல்லம்

தன் இரத்த சதை
       பிரிந்திருப்பினும்
தரமற்ற படைப்புகளால்
      தனித்தெரியப்பட்ட
தடுமாற்றம்...!

வாழ்வின் சந்தோச
      நிமிடங்கள்
வாழ வைப்பதில்
    குறைந்திருப்பினும்
வழி தெரியா
    வளர்ப்பினில் எற்பட்ட
வறுமை...!

தடுமாறிய  வாழ்க்கையில்
    முதுமை இங்கே
தடம் மாறிய
    இளமையின் தவறுதலில்...!

Sunday, 30 June 2013

நூற் பூங்கா

உடல் ஊனமானாலும்
      உதிரத்தின் கரைப்பினில்
உருவாக்கிய உருவங்கள்
      உறைந்து போன
மனங்களையும்
      உலுக்கி வைக்க...!

ஆறாண்டு அடுக்கிவைத்த
      அட்டைக்கல் கோபுரம் - அங்கு
அவிழ்ந்துவிடாமல்
      சுற்றப்பட்ட நூல்களில்
கண்டெடுத்த பூஞ்சோலை...!


ஊனம் குறையில்லை
      ஊருக்கு உரைத்து - அவர்
உதிரத்தில் உருமாறி
      உலக சாதனையென
சரித்திரக் கால் பதிக்க - இந்த
      நூற் பூங்கா...!

Friday, 21 June 2013

மலை மேகம்


மென் பனிச் சாரல்
     மேனி தொடும்
மேகம் - அங்கு
     பனித் துளிகளை
சுமந்துநின்ற
     பனை ஓலை...!

காலடி தெரியாத
     சாரல் மழை
பாதி முகம்
    காட்டி சிரித்த
பச்சிளங்
    குழந்தை...!

அன்றே அறுவடை
    செய்திருந்த
காய் கனிகள் - அங்கும்
    ஆற்றுத் தண்ணீரின்
துவக்கத்திற்கு
    அழுது கொண்டிருந்த
நிலமகள்...!


பசுமை எங்கும்
     படர்ந்திருக்க
பார்க்குமிடமெல்லாம்
     புன்னகை தாங்கிய
புதுப்
        பூக்கள்...!

Thursday, 20 June 2013

திருத்தங்கள்

நெருப்பினில் வைத்து
       நெருடிய விரல்களின்
வடுக்களில் வந்த
       திருத்தங்கள்...!

தடுமாறி கீழே
      விழுகையில்
சரீரத்தில் ஏற்பட்ட
      திருத்தங்கள்...!

பலமாக வேண்டியவை
       பலவீணமாகையில்
மனவலிமையில் உருவான
       திருத்தங்கள்...!

சூழ்ந்து நின்ற
       சுற்றமும் நட்பும்
சுத்திகரிக்கப்பட்டு -  நம்
       இயல்பில் உருமாறிய
திருத்தங்கள்...!

திருத்தங்கள்
        தீர்வதில்லை
தினம் தினம் வருகிற
        திகைப்புகள்
தீரும் வரை...!

Saturday, 8 June 2013

எழுகிற சுரியன்

வானம் விரிய
     வங்கக் கடல் கொதிக்க
எழுந்தது - இந்த
     எரிகிற கோளம்
உலக இயக்கத்தை
     எழுப்புவதற்க்கு...!

பூக்கள் மலர்வதும்
    புன்னகை பூப்பதும் - உந்தன்
அன்பென்னும்
    ஆற்றுப்படுத்திய உஷ்ணத்தில்...!

பரவட்டும்
    உடல் முழுவதும்   
உடல் பிரிகிற இறகில்
         இயற்கையை இரசித்திருக்க...!

Sunday, 2 June 2013

எல்லை புரம்

சில்லென்று சிதறிய
         பனித்துளியில் முகம்
சிலிர்த்த
         பனிப் பூக்கள்...!

நீர் திவளையில்
         சிதறிய ஒளி - அதில்

வானத்தில் வரையப்பட்ட
         ஓவியம்...!

ஊர் காவளுக்காக
         காட்டுக்குள்ளே வைக்கப்பட்ட
அய்யனார் - அங்கு
         எட்டு நான்கில்
எழுந்து நின்ற
          வெண் குதிரை...!

வீதியெங்கும் விதைக்கப்பட்ட
         வெள்ளைப் பூக்கள் - அங்கே
 தோள்களின் வலிமையில்
         வலம் வருகின்ற
எல்லைக் காவலன்...!

Friday, 24 May 2013

நிலம்

நிலையற்ற மனிதத்தின்
         நிழல் விழுவதும்
நிஜம் மறைவதும்
         நிலையான - இந்
நிலமகளின்
         மடியினிலே...!

வெட்டினோம்
         புதையல் அளித்தாள்
துலையிட்டோம் - உயிர்
        தாகம் தனித்தாள்
விதவையாக்கினோம்
        மறு வாழ்வு கொடுத்தாள்...!

இன்று - அவள்
      கற்பம் கலைக்கிறோம்
நம்மை
      கல்லறைக்குள் புதைக்கிறாள்...!

Thursday, 16 May 2013

உதவும் கரங்கள்

நாளை என்பது
         பயமானால்
இன்றே நம்மை
        கொன்றுவிடும்
நேற்று என்பது
        வலியானால்
வாழ்வு
        தடம் புரண்டுவிடும்...!

கனவுகள் இங்கே
        விதையாகட்டும்
கண்ணீரினை
        துடைக்கின்ற விரல்கள்
நம் விடியளாகட்டும்...!

முடியும் என்ற
       சொல்லில் முன்னோக்கவும்
வறுமை என்ற
       சொல் வறண்டு போகவும்
இணையட்டும் இந்த
       உதவும் கரங்கள்...!

Sunday, 28 April 2013

உழைக்கும் வர்க்கம்

உடல் நடுங்கினாலும்
        நடுங்காத மனதிடம்
இரத்தம் சுண்டினாலும்
       சுருங்கிடாத -  உழக்கின்ற
செல்களின் எண்ணிக்கை...!

ஊர் உறங்கும் போதே
        உதிரம் கொதிக்கத் தொடங்கி
ஊர் அடங்கிய பின்
        உறங்கச் செல்லும்
உலக மாற்றத்தின்
       துறுப்புச் சீட்டு...!

கண்ணில் வலியிருப்பதாலோ
      ஆசைகள் அதிகமிருப்பதில்லை
மானம் மட்டும்
      மனையாகி - அங்கே
அன்பு  ஆட்சிசெய்கின்ற
     ஆலயமாய் - இவ்
உழைப்பாளிகளின்
      உறைவிடம்...!

Friday, 26 April 2013

சித்திரா பெளர்ணமி

முழுமுகம் காட்டி
      வலம் வந்த
முழு நிலவு
        வழி காட்ட - அதன்
முகம் பார்த்த
         மயக்கத்தில் தலை குனிந்த
அல்லி  இருந்த      
        தாமரைக் குளம்..!

ஆலயத்தில் உச்சியில்
        ஏற்றப்பட்ட விளக்கு  - அதில்
அசைந்தாடிய
       தீப ஒளி
வீதியெங்கும் வழங்கப்பட்ட
      அன்னதானம் - அங்கே
ஆராவாரமிட்ட
       மனிதக் கூட்டம்...!

பூவாடை அணிந்திருந்த
        பூங்கலசமும்
பொன்னாடை அணிந்திருந்த
        தெய்வத் திருமகனும்
நிலவின் அழகுடன்
       போட்யிடுவதாய்
அத்தருணம்...!

Thursday, 11 April 2013

போர் வீரன்

நெஞ்சில் குத்திய
        வாள் வலிப்பதில்லை
முதுகில் குத்திய
       முகங்கள் மறப்பதில்லை...!

ஒரு நிமிடம் உறவாகி
        மறு நிமிடம் எதிரியாகும்
சிக்கலான உறவுகளில்
        வாழாது  பிறந்த
மண்ணை முத்தமிட்டு
        உயிர் துறக்கத்
துணிந்தவன்...!

தீவினைத் தருவதானாலும்
       தரத்தினை இழக்கா
வாள் முனையை
       ஏந்தி நின்று
வதைக்கின்ற
       வல்லுருக்களுக்கு
விடை கொடுத்து
        வீரு நடை போட்டவன்...!

களத்தில் உயிர் பிரிந்தாலும்
       கண்ணிமைக்குள் காத்திருந்த
உறவுக்காக அவ்
       உயிர்களின் நினைவுடன்
இறப்பவன்...!

Saturday, 6 April 2013

விளங்கும்

பிறந்த நாளிளே
          இறந்தாலும்
இறகுகள் வலிக்க
         பறந்து பறந்து
வாழ் நாளை
         வசந்தமாக்கும்
மே பூச்சி...!

உடல் தாங்கும்
        இறகின்றியும் 
இயற்க்கை
       அமிர்தம்  படைக்கும்
தேனீக்களின் படை...!

 சிறு சிறு உருவமாய்
        சிதையாத உறவுகளில்
சித்தெறும்பு
        சிறுவளைக்குள்
சேர்த்து வைத்த
        சிறப்பியல்பு...!

தவறி கீழே
       விழுந்தாலும்
தன்னம்பிக்கையில்
        தன்னியல்புக்கு
திரும்புகின்ற
        சிலந்தி...!

வாழ்வதற்க்கு பலம் பெற
      கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஊண்மையான சுதந்திரத்தில்
       சுற்றித் திரிகின்ற
பட்டாம் பூச்சி...!

சிறு சிறு ஜிவனும்
       சந்தோசத்தின்
வழி காட்டியாய்
        மதிக்கின்ற அன்பினில்
மறக்க வேண்டிய
       விரோதத்தை...!

Friday, 5 April 2013

அன்பு

கேட்டு கிடைப்பதில்லை
        கிடைத்ததற்க்கு கேட்பதில்லை
ஒவ்வொறு ஊனுக்குள்ளும்
         உடைமைகளைத் தாண்டி
உணர்வுகள் தேடுகின்ற
         உன்னத மருந்து...!

இது இருக்குமிடம்
         தவறு நடப்பதில்லை
இல்லாதிடத்து தவறுகள்
         இல்லாமல் இருப்பதில்லை
சந்தோசம்
         இருப்பதற்க்கும்
இறப்பதற்க்கும்
         நிஜமான காரணி...!

அன்னையிடம் கிடைக்கின்ற
         எதிர் பார்க்கா அன்பு
நண்பர்களிடம் பெறுகிற
         எதார்த்த அன்பு
துனைவியிடம் தரப்பட்ட
         பகிர்கிற அன்பு
குழந்தைகளிடம் குடிகொண்ட
         அக்கறையான அன்பு - என
அன்பின் உருவம்
         மாறினாலும் மனிதம்
மறுக்காமல்
          ஏற்க்க நினைக்கிற
நிலயான ஆதாரம்...!

Friday, 29 March 2013

அடிமையா அவன்?

உயிர் பாதி இழந்தாலும்
         உறவுகள் வாழ
ஊருக்கு வெளியே
         உதிரம் கரைத்தவனின்
உடல் மட்டும்
         ஊர் வந்து சேர்ந்தது
மண்ணின்
          உடைமையென...!

வல்லுருவின்
          வலிமையில்
அனுப்பி வைத்த
          சவப் பெட்டிக்குள்
அடையாலம் காட்டிய
         தாயின் துயர ரேகைகள்...!

கருணையில்லா
       புகுந்த மண்ணும்
கண்டு கொள்ளா
       பிறந்த மண்ணும்
நீதி கேட்காமல் 
         நிதியனுப்பியது - அவன்
அடக்க
          சடங்கிற்க்கு...!

தினம் தினம்  சரிகிற
         சவப் பெட்டி குறையுமோ?
கொன்று குவித்த
          கொடுமையையும்
ஆதாயமாக்குகிற
          குறை மனதுடையவர்களால்...!

Saturday, 23 March 2013

கிழக்கே வெளுப்பு

மெல்ல மெல்ல
      மேற்கே தரையிறங்கிய
விடி வெள்ளி...!

விட்டு விட்டு பொழிகின்ற
       மென் பணிக்கு
மூடிய உடலின்
        மெய் சிலிர்ப்பு...!

தவறுகள் தனதாலும்
       ஏற்றுக் கொள்ளா
தண்டனைக்கு ஆள் தேடி
       கண்ணில் உருத்துகின்ற
எரிபூச்சிகள்...!

தனலாய் எறிகின்ற
         டீ கடை நெருப்பின்
உஷ்ணத்தில்
         உணர்கின்ற சுகம்...!

வெள்ளை புரட்சியை
        வளர்க்க வந்த ஜிவனின்
அன்னை அழைப்பும்
        அடையாளம் காட்டியது - அந்த
கிழக்கு வெளுப்பினை...!

Thursday, 21 March 2013

சிறு புள்ளி

சொட்டுகின்ற 
        வியர்வைத்  துளியில்  
பெற்றுவிட்ட செல்வம் - அங்கே
        குறைந்து போகா
உறவுகளின் நிம்மதி...!
 
தன்னம்பிக்கை உடனிருக்க
    தடுமாற்றத்தினில் 
சோரம் போகா
          மனித வாழ்வு ...!

துரத் நினையா
       மனிதனின் வெற்றியும்
துரத்தகின்ற
      மனக் கனவில்
மறைந்து போகின்ற
       பயண மலைப்பும்...!

உலத்தின் அளவில் - நீ
         சிறு புள்ளியானாலும்
உறங்குவது நிம்மதியின்
        ஊஞ்சலாகட்டும்
பஞ்சனையில்
         புழுங்குகின்ற மனதை விட...!

Saturday, 16 March 2013

வாக்குறுதி

வசந்தம் வரும்
      வாழ்வு செழிக்கும் - என
சுளுரைத்து பெறப்பட்ட
      கடவுச் சீட்டில்
பாமரனின்
      சுருக்கு பையும்
களவாடப்பட்டது...!

வஞ்சகமோ இது
      வாணிபமோ
நாமுண்ணும்
      உணவு படைத்தும்
பசித்திருப்பவனை
      மவுனமாய்
தூக்கிலிடுவது...!

Sunday, 10 March 2013

மலையருவி

மலையருவி மண்பார்க்கையில்
          சிதறிய சில்லுகலாய்
நீர்த் திவலைகள்
         அலங்கரித்திருந்த
அன்றலர்ந்த மலர்கள்...!

மூலிகைச் செடியில்
        முகம் புதைத்து
மெல்ல மெல்ல
        வருடிச் சென்ற காற்று...!

வான் மகளின்
         பிரிவுதனில்
தண்ணீரின் தற்க்கொலை
       முயற்சியை
தாங்கி பிடித்த
       நில மகளின் தாய் மடி...!

நிஜமான வளமென
         நீண்டுவிட்ட மரங்களும்
 நிசப்த நிலத்தினை
         நிலை குலைக்கின்ற
நீரோடையின்
        சலசலப்பும்...!

காணுமிடமெல்லாம்
        பசுமை நிறைந்திருக்க
கண்களுக்குள்
        பதிந்துவிட்ட
கலையழகாய் - இப்
        பூஞ்சோலை...!

Friday, 1 March 2013

இளைஞ்சன்

நம்பியிருக்கிறது இளைஞ்சா
          நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
          நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!

சாதி என்பார்
         சமயம் என்பார்
சரிந்துவிடாதே
         சாக்கடைக்குள்
சரிந்துவிடாதே...!

சமத்துவம் என்னும்
        சத்தியத்தில்
சரித்திரம் படைக்கும்
       வல்லமை  உனக்கிருக்க...!

சிறு மனதுடன்
       கூட்டம் சேர்த்து
குவித்து வைக்கிற
        பணமும் -  அதில்
குற்றமற்றவரை
       குற்றவாளியாக்கும்
ஆளுமையையும்
        அழிந்து போகட்டும் - உன்னில்
அழிந்து போகட்டும்..!

அன்பு மட்டும்
       விதையாகி
தனிமனித சுதந்திரத்தில்
         திளைக்கின்ற
தரணி உனதாகட்டும்...!

 நம்பியிருக்கிறது இளைஞ்சா
          நம்பியிருக்கிறது
நாளைய பாரதம்
          நம்பியிருக்கிறது - உன்னையே
நம்பியிருக்கிறது...!

Sunday, 24 February 2013

வாழ்வே மாயம்

100  வது பதிவு

            எனது கல்லூரி பருவத்தில் "இளந்தூது" என்னும் கல்லூரி நாளிதழுக்கு நான் சமர்ப்பித்த "மனிதன் மாறிவிட்டான்" என்னும் தொகுப்பு வேறு ஒருவர் பெயரில் வெளியாகியது.

               5 வருடங்கள் சென்ற பின் தணிகைவேல் என்பவரின் மூலம் இந்த blogging  பற்றி அறிந்து கொண்டேன். உண்மையில் நம் மனம் விரும்பும் பாதையை எதிர் நோக்கிய செயல்பாடுகளில் நம் உள்மனம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் என்பது உண்மையே.

              எனது பள்ளிப் பருவத்தில்  "வாழ்வே மாயம்" என்னும் தலைப்பில், முதல் முதலில் மேடையில் வாசிக்கப்பட்ட  வரிகள் இங்கே...

     *************************

வாழ்வே ஒரு மாயை - இதில்
        ஏனடா பல சோதனை
ஆசையும் ஒரு மாயை - அதில்
        அடைகிறோம் பல வேதனை...!

அன்பும் ஒரு மாயை - அங்குதான்
         பெறுகிறோம் நல்லுறவுகளை
கல்வியும் ஒரு மாயை - இங்கு
         கற்க்கிறோம் நல்லொழுக்கங்களை...!
  
அறிவியலும் ஒரு மாயை - இங்கே
           உணர்கிறோம் உலக அசைவுகளை
விஞ்சானமும் ஒரு மாயை - இவ்விடத்தில்
           போட்டியிட்டோம் இறைவனின் படைப்புகளை...!

எண்ணுவது நடப்பதில்லை
          நடப்பதை நினைப்பதில்லை
என்பதாலோ - இவ்
          வாழ்வே மாயம்...!


"தோல்வி நம்மை  தொட்டாலும் தொடர்ந்தது இல்லை என்றிருக்கட்டும்"
   ************************* 

Saturday, 23 February 2013

இருள் விளக்குப் பாதை

மண் குடிசை
       பாதி வேய்ந்த 
கூரை - அங்கு
      இரக்கத்துடன் 
இறங்கிவந்து
      ஒளி வீசிய 
 வெண் நிலவு...!

தன்னம்பிக்கை 
      வளர்க்க
தன்னையே 
     தற்கொலை
செய்கின்ற 
     திரிகள்...!

மகன் 
      சாதிப்பான்
மனக் 
      கனவுடன்
மண்டியிட்டு 
      தொழுகின்ற
  தாய்...!

இருள் 
      முழுவதும்
பரவிக் கிடந்த
       இலவசப் பொருட்கள்
முகம் மட்டும்
      அரசுயிட்ட 
சோதனையில்
       வியர்த்திருக்க
விடியல் வருமென
         வாசிக்கப்பட்ட நூல்கள்...!  

விடிந்த பின் 
      வீசிய
புயலெனும் பூதம்
        பெயர்த்தெடுத்த 
கூரையும்
        அரசு  அளித்த
ஆறு  ஐந்து நூறு
        நோட்டுகளும்...!

பாதி நாள்
        தந்தையுடன் 
பணிபுரிந்து
       வேய்ந்து  விட்ட
கூரையில்
       வினாவாகிய
அவன்
       இருள் விளக்குப் பாதை...!

Saturday, 16 February 2013

பயனற்றவை

ஆணி வேருடன்
        பிடுங்கி எறிந்து விட்டு
மரத்தில் நிழல் தேடும்
        மனிதமும்...!

கருவினில் சிசுவினை
        பறிகொடுத்த
தாயினை போல்
       கலங்கி நின்ற காற்றும்...!

விடைதெரியா வாழ்வில்
        விடை என
விட்டு விட்டு
        பொழிகின்ற வானிலையில்
விதைக்கப்பட்ட
         விதையும்...!

வளர்ச்சியென
         தன்னை மட்டும்
வளர்த்து குளத்தின்
        சூழலை மாசு படுத்தும்
நீலப் பசும் பாசியும்...!

பாதை முழுவதும்
       தெளிக்கப் பட்டாலும்
பயனற்றவையே...!

Friday, 15 February 2013

புன்னகை

எளிமையான வாழ்வினை
          நிரப்ப வந்த
எதார்த்த நண்பன்...!

மருந்துகள் அல்லாத
        மனித வாழ்விற்க்கான
மருத்துவம்...!

பூத்தம் புதிதாய்
        பூத்த பூவின்
மலர்ச்சியிடம் - போட்டியிட்ட
        மனிதத்தின்
ஒற்றை ஆயுதம்...!

Saturday, 2 February 2013

சுயநலம்

அரசு

   நாவிற்க்கு அடிபனியா     
           கருத்துக்கு கருத்தடை
   மன சாந்திக்கு
           மக்கள் கூட்டத்தின்
   குருதிப் புனல்...!

மக்கள்

   வந்தது நமக்கில்லை
         வன்மையை வசைபாட - என
   வாழத் தொடங்கினோம் - இன்று
         வருங்காலம் நமக்கில்லை
    நாணயத்தில்
         நசுக்கப்பட்ட நாயகன்கள்...!

நிலமை
 
   உலகமறியும் இந்தியனை
         இடம் பெயரச் சொல்லும்
   மாற்றம்  இந்த மண்ணில்
         மதத்தினை மதில் மேலேற்றி
   மனிதத்தை
         மண்ணுக்குள் புதைக்கின்ற
   சுய நலத்தின்
         சுடுகாடாய்...!