உடல் நடுங்கினாலும்
நடுங்காத மனதிடம்
இரத்தம் சுண்டினாலும்
சுருங்கிடாத - உழக்கின்ற
செல்களின் எண்ணிக்கை...!
ஊர் உறங்கும் போதே
உதிரம் கொதிக்கத் தொடங்கி
ஊர் அடங்கிய பின்
உறங்கச் செல்லும்
உலக மாற்றத்தின்
துறுப்புச் சீட்டு...!
கண்ணில் வலியிருப்பதாலோ
ஆசைகள் அதிகமிருப்பதில்லை
மானம் மட்டும்
மனையாகி - அங்கே
அன்பு ஆட்சிசெய்கின்ற
ஆலயமாய் - இவ்
உழைப்பாளிகளின்
உறைவிடம்...!
No comments:
Post a Comment