Thursday, 29 September 2011

வெளிச்சம்


பகல் இறக்கின்ற
      பொழுதில்
வெண்ணிலவின்
      பிறை நெற்றி மட்டும்
தன்னந்தனியாய்....

கன நாழிகையில்
      கருப்பு தேவதைகள்
தங்கள் வெற்றியில்
      கூச்சலிடுவதாய் எங்கும்
கருப்புத்திரை மட்டும்....

நான் எரியூட்டிய
      சிறு தீபம் மட்டும்
ஆற்றலுடன்
      வெண்மை நிரப்பியது - அந்த
வெளுத்துப் போன
      இருட்டுக்குள்...

Friday, 23 September 2011

தென்றலின் தேடல்

தேடி வந்த தென்றல்
        தேகத்தில் பட்டு
திசையெங்கும் பரவிற்று...

மனித மன நேசத்தை
         அறிய வந்து
பாசவலை அருந்துபோய்
         மழலைச் சிரிப்பினில்
புகுந்தது
          உலகத்தின் கலகமற்றதென
அமைதியை தேடி....

Tuesday, 20 September 2011

மனித இனம்


பூமியில் பூத்த
        புதுமலர்கள்
வாடிய வற்றல்
        வண்ணத்துப்பூச்சியின்
சிறகொடிந்த காலம்...

இல்வாழ்வில் இணைந்த
        இருமனப் பூக்கள்
கருகிய மேடை - நம்
        கருவினில் கலைந்த
கற்பத்தின் சிதை காலம்....

கரையோர கற்பக பூக்கள்
        கருவையில்
கலைந்து கிடந்தது நம்
        கன்னத்தின் கருகிய பாகத்தின்
உருக்களின் காலம்....

தொடர் மழையின்
          தோன்றலில்
தொலைந்து போன
          தோகையினை தேடி
இந்த தோகை மயில்கள்....

தன் இனத்தின்
         தடங்களை காக்க முடியாதவன்
அலைகிறான்
         வேற்று கிரகத்தில்
உயிர் வாழும் ரகசியம் தேடி....


Thursday, 15 September 2011

நட்பு

சந்தோச நிமிடங்கலில்
      நம்முடன் இருந்து
வாழ்வின் சரிவு நேரத்தில்
      பிரிகின்ற கண்ணீரல்ல நட்பு - அது
நாசிக்குள் நுழையும்
      மூச்சிக்காற்றாய் நம்
நரம்புத் துடிப்பின்
      ஒவ்வொரு அசைவிலும்
உறைந்திருப்பது...

Wednesday, 14 September 2011

சரிந்த சடலம்

தன் காதலியிடம் மறைந்து போன ஆன்மாவின் உரையாடல்....

என் உடைந்த எலும்புகளின்
       உதிரத்தின் பிரிவிலும் உன் நினைவு...
சரிந்த என் சடலம் கூறும்
        உன் சரித்திரப் பதிவுகளை...

நின்றுபோன என் இதயத்தில் காணலாம்
         உன் இதய வாயிலை...
என் சடலத்தை சிதைத்துப்பார்- நான்
        கட்டிய உணர்வு சமாதியின் வலிமையை.....

காலமெல்லாம் பேச நினைத்த
       உதடுகள் உருகினாலும்
உருகாது உன் வாய் வந்த
      ஓர் சொல்...

ஏனோ இதயம் தடுமாறி
      என்னை இழந்தேன்
உன்னை அடைவதற்க்குள் - இங்கே
    மண்ணை அடைகிறேன்
உள்மனக் கயாங்களுடன்....

Wednesday, 7 September 2011

நினைவு

நிஜங்கள் கடந்த பின் - அதன்
    நிழல்கள் மட்டும்
நிழற்படத் தகடுகளாய்
    நினைவுகளில்....

உள்ளக்கிடக்கையில்
    வாழும் இந்த
உருவமற்ற உணர்வுக்கோ
    வாட்டம் என்பதில்லை
உயிர் வாழும் வரை....


Tuesday, 6 September 2011

இந்தியனாய்

இதயத்தில்
      துடிக்கின்ற துடிப்புக் கூட அதன்
வெற்றிக்கு வேறாய் இருக்க ஆசை....

அமைதியெனும் அன்புத் தோட்டத்தில்
      பூக்கின்ற பூக்களை
காத்து உயிரை விடுகின்ற
       உன்னத தருணம் வேண்டி ஆசை..

அன்னையின் கருவறை கதகதப்பு
      பத்து மாதம்
அவளின் அரவணைப்பு
     அரைக்காலம் தான் - ஆனால்
இந்தியத் தாயே நீ
     எம் இனத்தின் கருவறையாய்
என்றென்றும்...

உன் மடியின் கதகதப்பில்
      வாழ்கின்ற ஆசை வடிவம்
ஆவல் கொள்கிறது உந்தன்
      கீர்த்தியின் காரணக் கருவில்
ஒற்றை சொல்லாகி
      உன் உயிருக்குள்
புகுந்து மறைய....

Monday, 5 September 2011

தனித்துவம்

மண் சேற்றில்
      மனம் தரும்
தாமரை....

பருக்கை காட்டில்
    பழம் தரும்
பேரிச்சை....

ஊர்வலத்தில்
   மிதிபடும்
பூக்கள்....

தென்னங்குலையில்
   தெரித்த
தேங்காய்....

இவையெல்லாம்
    கனலுக்குள் வழ்ந்தாலும்
கண்ணீரில் நடந்தாலும்
    சந்தோஷத்தை
மட்டுமே கொடுத்து
    வாழ்வன.....

Thursday, 1 September 2011

பூவும் மனிதமும்

சவ ஊர்வலத்தில்
          அழுகும் பிணம் நாங்கள்-நீயோ
காதல் தோற்றத்தின் காலச்சுவடாய்
          காலப்பதிவேட்டின்  நடுவில் இன்றும்....

கண்டவுடன் கடந்த காலக்  கனவிற்கு
         கொண்டு செல்லும் கருவறையாய்
எங்கள்  சுக துக்கங்களை
         சுமந்து கொண்டு....