Thursday, 18 August 2011

அழகு

தலையசைத்து
        தென்றலை வரவேர்க்கும்
தென்னையின் கீற்று...

வானத்தில் வலம்வரும்
         சூரியனின் கதிர் வீச்சில
 தலை குனியும் நெற்கதிர்கள்...

முகம் கட்டாது - 
        மனம் மயங்கும் குரலில்
 பாடும் குயில்...

மனம் சருக்கும்
       சந்தத்துடன்
ஓடுகின்ற ஓடை...

கொஞ்சும் குரல் காட்டி - மனம்
         கொள்ளை கொள்ளும் கிளி...

மென்மையான இறகில்
        வன்மனம் கரைக்கும்
வெண் புறா...

பனித்துளியுடன் பிறந்த
   புதுப் பூ...

இவையெல்லம்
      உண்மையான அழகாய்
 உலகத்தின் உலைக்கலம்
      இயங்கும் வரை...


No comments: