Thursday, 4 August 2011

பற்றுக்கோடுகள்

தோற்றம் தெரியாது
         தொலைகின்ற இதயத்தின் உணர்வுகள்....

எல்லையற்ற ஆசைகளின்
         ஆரம்பப் புள்ளியும் இறுதியும்....

வலையில்லாமல் கூண்டுக்குள்
        வைக்கும் அன்புப் பிணைப்பின்
                 ஒற்றை நாரிதழ்....

வாழ்வில் என்றோ
          மடிந்து போன மழலைப் பருவமும்
                   மனதின் பூரிப்பும்......

நினைவுச் சிலையின் உயிரோட்டமான
         தாயின் கருவறை கன நிமிடங்கள்......

இப்படி எத்தனை எத்தனையோ
       வண்ணக் கோடுகளின்
 எல்லை அறியா ஏமாற்றமும்
             என்றும் தணியா தாகமும்
வாழ்வின் உயிர் நாடியாய்
          நம் இதயதுடிப்பிற்கு
உணர்விருக்கும் வரை...


No comments: