Wednesday, 10 August 2011

உண்மைத் தேடல்

பச்சைக் கிளியின்
     சிறகில் அமர்ந்தேன்
உதறிற்று தன்
     சிறகின் கறையென்று.....

பனைக் குறுத்தின்
     திணவுகளாக
மயிலிறகின் மென்மையை
      உணரச் சென்றவன்
உறைந்து போனேன் - அதன்
       உணர்வற்ற வார்த்தைகளில்....

மூடிய தாமரை மொட்டில்
      தரை இறங்கினேன்
காதலியை காண வந்தவன்
      கனலால் கருக்கினான்...

நீரின் ஓட்டத்தின்
     எதிராய் ஓடினேன் - அந்த
மலையருவியின் பிறப்பிடத்தில் - அவர்கள்
      காதலின் இரகசியம்
பித்தனாக்கிற்று என்னை...

எல்லாம் என்னை
       துரத்திற்று
என் தாய் மடியில்
       தலை சாய்ந்தேன்
வாரி அனைத்துக் கொண்டாள் - தன்
       வான்லோகக் கங்கையென்று....


No comments: