தடுமாறிய கால்கள்
தடம் மாறிய பாதை
தொடும் தூரம்
தொலைவானாலும்
தொடங்கிய பாதை மட்டும்
முடிவதில்லை என
தோய்வுற்றிருக்க...!
ஒருத்தி மட்டும்
உயிர் கொடுத்தால் - அவன்
நம்பிக்கையின்
முதல் துடிப்பிற்கு
பிரிந்தது உடலானாலும்
பிணைந்திருப்பது
அவள் உயிர்
என்று சொல்லி...!
Friday, 1 August 2014
Friday, 25 July 2014
இறுதி நாள்
கற்பனையில் அந்த இறுதி நாள் ...
நீலவானம்
- அன்று
நெருப்பு மழை
பொழியும்
- தான்
எற்றுக்கொண்ட கரைகளை
கண்ணீறாய்
வெளியேற்ற...!
சுற்றி வந்து
தழுவலில்
சுகம் தந்து செல்லும்
தென்றல்
- அன்று
தெளித்து விட்டு போகும்
தன்னை சூழ்ந்துகொண்ட
அழுக்குகளின் அமிலத்தில்...!
எழுகின்ற
சுரியன்
ஏரி பிழம்பினை
விட்டெறியும்
நிலமகளின்
நிலைகுலைந்த
ஈர்ப்பு விசை
மாற்றத்தில்...!
அமைதியே
உருவானவளின்
அடிவயிற்றில் சேர்த்துவைத்த
கழிவுகள்
கலங்கடிக்க
மனித படைப்புகளுக்கு
வலை விரிக்கப் போகும்
கடல் கன்னி...!
கோட்டைகளும்
கோடிகளும்
இமயம் வரை
ஓடி
ஒளிந்து
கொள்ள
ஒளி உருவாய்
தோன்றியவன்
சொல்லப் போகும்
ஒற்றை வரி - இங்கு
மனிதம் உருவாக்கிய
வேற்றுமைகள்
உருவமற்று போனது - எந்தன்
மறு படைப்பிற்கு...!
Tuesday, 15 July 2014
பிறப்பு
முதன் முறை
முகம் பார்க்க
கண் இமை திறந்த
சிறு குழந்தை
பாதி மயக்கத்திலிருந்தும்
பதறி எடுத்த
முத்தமிட்ட தாய்...!
தாயின் கருவரை
தந்துவிட்ட
சுகத்தின் இழப்பில்
தொண்டைக் குழி
ஏறி இறங்க
அழுதிருந்த குழந்தை
வாரிசு வந்ததென
வாரி அணைக்கின்ற
வயதானோர்கள்...!
நாட்களுடைய மாற்றத்தின்
மாறுபட்ட ஸ்பரிசமும்
உள்ளத்தில் உலகம்
விதைக்கப்போகும்
உணர்வுகளை
வண்ணங்களாய் ஏற்கப் போகும்
வெள்ளை காகிதமாய் - அவ்
வெளுத்துப் போன
பிள்ளை முகம்...!
முகம் பார்க்க
கண் இமை திறந்த
சிறு குழந்தை
பாதி மயக்கத்திலிருந்தும்
பதறி எடுத்த
முத்தமிட்ட தாய்...!
தாயின் கருவரை
தந்துவிட்ட
சுகத்தின் இழப்பில்
தொண்டைக் குழி
ஏறி இறங்க
அழுதிருந்த குழந்தை
வாரிசு வந்ததென
வாரி அணைக்கின்ற
வயதானோர்கள்...!
நாட்களுடைய மாற்றத்தின்
மாறுபட்ட ஸ்பரிசமும்
உள்ளத்தில் உலகம்
விதைக்கப்போகும்
உணர்வுகளை
வண்ணங்களாய் ஏற்கப் போகும்
வெள்ளை காகிதமாய் - அவ்
வெளுத்துப் போன
பிள்ளை முகம்...!
Sunday, 29 June 2014
வண்ணத்துப் பூச்சி
வாழ்வின் வதைபாடுகளை
உலகை காணுமுன்னே
கண்டெடுத்தாலும் - அதன்
சிறகுகளில்தான் எத்தனை
ஆராவாரம்...!
உந்தன் பலம்
திரட்டும் பக்குவத்தில்
பக்தனானோம் - உலகினில்
வாழத் தேவையானதென
மன்றங்கள் முழங்கிய
அந் நாளிலே...!
உன் மேனியெங்கும்
சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் - இன்றும்
எங்கள் வாண்டுகளின்
விளங்கமுடியா அதிசயம்...!
வாழ்வின் பாதியை
கூண்டுக்குள் கழித்தாலும்
வாழுகின்ற காலமட்டும்
சந்தோசத்தில் சுற்றித்
திரியச் சொன்ன
வரம் உனக்கு...!
உலகை காணுமுன்னே
கண்டெடுத்தாலும் - அதன்
சிறகுகளில்தான் எத்தனை
ஆராவாரம்...!
உந்தன் பலம்
திரட்டும் பக்குவத்தில்
பக்தனானோம் - உலகினில்
வாழத் தேவையானதென
மன்றங்கள் முழங்கிய
அந் நாளிலே...!
உன் மேனியெங்கும்
சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் - இன்றும்
எங்கள் வாண்டுகளின்
விளங்கமுடியா அதிசயம்...!
வாழ்வின் பாதியை
கூண்டுக்குள் கழித்தாலும்
வாழுகின்ற காலமட்டும்
சந்தோசத்தில் சுற்றித்
திரியச் சொன்ன
வரம் உனக்கு...!
Thursday, 26 June 2014
தோய்வதுவுமில்லை
அன்பினில்
தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
தோய்வதுவுமில்லை...!
கஷ்டத்தில்
சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
சோரம் போவதில்லை...!
ஏழை இங்கு
அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
செல்வம் தரும்
பலமும் - தோய்ந்து
போகும் வரை
தொடும்
துரத்தில் இல்லை - நாம்
தொலைத்து விட்ட
நிம்மதி...!
தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
தோய்வதுவுமில்லை...!
கஷ்டத்தில்
சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
சோரம் போவதில்லை...!
ஏழை இங்கு
அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
செல்வம் தரும்
பலமும் - தோய்ந்து
போகும் வரை
தொடும்
துரத்தில் இல்லை - நாம்
தொலைத்து விட்ட
நிம்மதி...!
Subscribe to:
Comments (Atom)