Thursday, 26 June 2014

தோய்வதுவுமில்லை

அன்பினில்
       தொலைந்து போகும்
அறிவு - பகையினில்
       தோய்வதுவுமில்லை...!

கஷ்டத்தில்
      சோர்ந்து போகும்
ஆசை - வெற்றியில்
      சோரம் போவதில்லை...!

ஏழை இங்கு
      அழிக்க வேண்டிய
இதயத்தின் ஆசையும்
      செல்வந்தன்
தொலைக்க வேண்டிய
      செல்வம்  தரும்
பலமும் -  தோய்ந்து
       போகும் வரை
தொடும்
        துரத்தில் இல்லை  - நாம்
தொலைத்து விட்ட
        நிம்மதி...!

Monday, 16 June 2014

இடி முழக்கம்

மலை முகடுகள்
     சுமந்து நின்ற
நிலவொளியின்
     மூன்றாம் பிறை...!
 
முல்லை நில
      நீர் வளத்தில்
முகம் புதைத்திருந்த
      வெண் தாமரை...!

ஆணை முகனின்
      அர்ச்சனைக்காக
அந்தரத்தில் வளர்க்கப்பட்ட
     அருகம் புல்...!

தூரத்தில் நின்று
      விட்டெரிந்த கற்களில்
தோன்றி மறையும்
      அலைகளில்
உருகிக் கொண்டிருந்த
     சிறுவன்...!

எட்டுத்திக்கும் நடுநடுங்க
      நெற்றி நடுவில்
அடித்‌தர் போல
      அச்சுருத்திய
இடி முழக்கம்...!

Saturday, 31 May 2014

அந்தி வானம்

புன்னகை அங்கே
       கொட்டிகிடந்தது
தோட்டத்தில் சில
      புதுப் பூக்கள்
மலர்ந்திருப்பதாய் - அந்
      நட்சத்திரக் கூட்டம்...!

சிதறிய பிம்பம்
     மீண்டும் சேர்வதாய்
சிலை வடித்திருந்த
    வெண் மேகங்கள்...!

தூரத்தில் நின்றிருந்த
    முழு நிலவின்
அழகினை
     படம்  பிடிக்க
வந்து சென்ற
     மின்னல் ஒளி...!

சிதறிய மழைத்துளி
     சித்தரித்த ஓவியமாய்
குடை பிடித்த
     வானவில்...!

மனம் மயங்கும்
      மண் வாசனை
ஒன்றிரடாய்
     விழுந்து  விட்ட
மழைத் துளியின்
      கலப்பினில்...!

கதிரவன் மறைகின்ற
      வேளையிலும்
கண்ணில் தென்படும்
      கலையழகு பிம்பங்கலாய் - இவ்
அந்தி வானம்...!

Wednesday, 21 May 2014

விதை

வீசிய புயல் காற்றில்
       சிதைந்திருந்த சிறகுகளுடன்
பாட்டாம் பூச்சி
       பாதி வயிறு பசித்திருந்தாலும்
பாவெமென உள்ளங்கையில்
       ஏந்தி வந்த சிறுவன்...!

மகானோ
       மண்டியிடச் சொன்ன
பழிக்கின்ற கூட்டத்தின்
       தலை மகன்
பட்டென கன்னத்தில்
       அரைந்து விட...!

அழுகையுடன் அவன்
       அனைத்து வந்த
ஜீவனின் துடிப்பும் - அவன்
      இதய நரம்புகளை
முறுக்கேற்றி
      கொண்டிருக்க...!

பாதை வழி
       பள்ளத்தில்
சறுக்கி விழுந்தவனின்
       சடலமட்டும்  கிடப்பதாய்
மூர்ச்சையாகி விட...!

ஓடி வந்த சிறுவனின்
       உதவ முடியா
கரங்களானாலும்
      உரைத்துவிட்ட குரலில்
உயிர் காத்து நிற்க
      விழுந்தவன் விழிகளில்
விழுந்ததோ - அவன்
      அறைந்த கன்னங்கள்
பல் வலியில்
      பருத்திருந்ததையே...!

உறக்கமில்லா இரவு
      விடிந்து விட
காத்து வைத்த
      அன்பின் கரம்  பற்றி
அழச் சென்றவன்
      கண்ணீர் விடுகிறான்
நேற்றிரவு பெய்திருந்த
     மழை வெள்ளத்தில்
இடிந்து விழுந்த
     காரைச் சுவற்றுக்குள்
சிதைந்திருந்த
     சடலத்திற்கு...!

இறந்தவன்  இன்றும்
       எங்கள் ஆசானின்
ஆண்டு முதல் உரையில்
       மனிதத்தின் மென்மையை
மொட்டாக இருக்கையிலே
       உணர்த்திய - எங்கள்
உண்மைத்
       தலைவனாக...!

Saturday, 10 May 2014

கிராமத்து நடை


பாவி மகள்
   பார்வை பட்டதில்
பாதி உயிர்
   பிரிந்துவிட
மீதி உயிர் கொண்டு
   வீடு வரை வந்தவன்
உறங்கையிலும்
   விழித்திருக்க...!

ஊரருகே ஓடிய
        ஆற்றங்கரையோரத்தில்
துங்கிச் செல்லும்
    ஒற்றை  வழிப் பாதையிலே
ஒற்றனைப் போல்
    காத்திருந்து - மனந்தவனின்
மீதி உயிர் 
    பிரிந்ததாம்
மனிதத்தில்  
    ஓட்டியிருந்த சாக்கடை
விட்டெரிந்த
    வாள் முனையில்...!