வலது கண்
துடித்ததாம்
வெற்றி நமக்கென
வலம் வந்த பாதையெங்கும்
வறுமையை
விதைத்ததுவிட்டு...!
விதைக்காமல்
அறுக்க நினைக்கும்
வணிகத்தை தாண்டியும்
வளர்ந்து வருகிறது
வான் முழுவதும்
நிறைந்து விட்ட
அதிர்வலைகள்...!
வானில் உதிக்கின்ற
பகலவனையும்
துரத்து விண்மீனாய்
காட்டிக் கொள்ள - எங்கோ
விட்டு விட்டு
எறிகிற ஒளி விளக்கையும்
விடிவதற்குள்
அணைத்துவிட...!
தேரினிலே பவனி
இன்றும் - தேர்ந்தெடுத்தவன்
தெருவிலிருக்க -
என்றோ எங்கோ
தொலைத்துவிட்ட
சமத்துவம் இன்று
சரித்திரப் பதிவுகளில்
மட்டுமோ?...!
Tuesday, 18 February 2014
Saturday, 15 February 2014
இயல்பு
வண்ணத்துப் பூச்சியின்
இறகுகளிள் இயல்பாய்
வார்க்கப்பட்டிருந்த
வண்ணத் திறல்...!
பூக்கள் தன்னில்
சுமந்துகொண்ட
பனித்துளியின்
இயல்பான அழகு...!
வெண் புறாக்களின்
இறகுகளில்
குடி கொண்டிருந்த
மென்மை...!
நேர்மையின் கருவறையை
வாழச் செய்ய
நிஜ மகனையும்
வதைத்து நின்ற
மனித இனம்...!
இவ் இயற்கையான
படைப்புகளின் இயல்பினில்
இருத்தி வைக்கப்பட்ட
அழகினை -- மறக்க
செய்யும் மனிதத்தின்
செயற்கை வாழ்வு...!
இறகுகளிள் இயல்பாய்
வார்க்கப்பட்டிருந்த
வண்ணத் திறல்...!
பூக்கள் தன்னில்
சுமந்துகொண்ட
பனித்துளியின்
இயல்பான அழகு...!
வெண் புறாக்களின்
இறகுகளில்
குடி கொண்டிருந்த
மென்மை...!
நேர்மையின் கருவறையை
வாழச் செய்ய
நிஜ மகனையும்
வதைத்து நின்ற
மனித இனம்...!
இவ் இயற்கையான
படைப்புகளின் இயல்பினில்
இருத்தி வைக்கப்பட்ட
அழகினை -- மறக்க
செய்யும் மனிதத்தின்
செயற்கை வாழ்வு...!
Wednesday, 5 February 2014
மீனாட்சி ஆலயம்
நீண்டு நெடுந்திருந்த
தாழ்வாரம் அங்கே
செதுக்கிவைக்கப்பட்ட
- தமிழ்
வீரப் பரம்பரை...!
வழியெங்கும்
ஒலித்திருந்த
கீதை - அங்கும்
தாயவளின்
தோழியான
கிள்ளைகளின் கீச்சுக்குரல்...!
தண்ணீரில்
- மிதக்கின்ற
நிலவொளியில்
முகம் பார்க்கும்
வெண்
புறாக்கள்...!
பளிங்கிக்
கற்களிளே
பொரிக்கப் பட்ட
பிறைமுடி
சூடியவனும்
சக்தியாய் உருவானவளும்...!
எத்தனை
ஆண்டுகளோ
இத்தனை எழில்மிகு
சிற்பங்களின்
வர்ணனைக்கு...!
எத்தனை
மானுடமோ
உளியெனும்
ஆயுதத்தில் - இவ்
உலக அதிசயத்தை
உருவாக்கியது...!
Tuesday, 28 January 2014
தீண்டும் வரை
கண்மூடித்தனமான பாசமும்
முட்டாலாக்கும்
கண்ணில் விழுவது
தூசியென்று அறியாமல்...!
அளவுக்கதிகமான கவனமும்
நம்மை களங்கப்படுத்தும்
அமைதியை குலைத்தது
ஆஸ்தியின் ஆசையென்று அறியாமல்...!
அச்சுருத்த நினைக்கும்
வாளும் நம்மை துளைப்பதில்லை
உறவென நாம்
சூடிக்கொள்ளும் நாகம்
நம்மை தீண்டும் வரை...!
முட்டாலாக்கும்
கண்ணில் விழுவது
தூசியென்று அறியாமல்...!
அளவுக்கதிகமான கவனமும்
நம்மை களங்கப்படுத்தும்
அமைதியை குலைத்தது
ஆஸ்தியின் ஆசையென்று அறியாமல்...!
அச்சுருத்த நினைக்கும்
வாளும் நம்மை துளைப்பதில்லை
உறவென நாம்
சூடிக்கொள்ளும் நாகம்
நம்மை தீண்டும் வரை...!
Thursday, 23 January 2014
குளிர்
வான்மழையாய் பொழிகின்ற
பனித் துளி - அங்கே
மண்ணுக்குள் முகம்
புதைக்கின்ற
கருஞ் சேவல்...!
கண் மறைக்கும்
காரிருள் - அப்பொழுதே
கண் இமை
திறப்பதாய் திறக்கின்ற
ஆலயத்தின்
கதவுகள்...!
விழித்திருந்தும்
தாயவளின் புடவையை
போர்வையாக்கிக் கொண்ட
சிறுவன்...!
விடியாத வானிலையில்
வீதியெங்கும்
வலம் வரும்
மானிடத்தின்
காதருகே வெப்பம்
தேடச் சொல்லும் - இக்
குளிர் காற்று...!
பனித் துளி - அங்கே
மண்ணுக்குள் முகம்
புதைக்கின்ற
கருஞ் சேவல்...!
கண் மறைக்கும்
காரிருள் - அப்பொழுதே
கண் இமை
திறப்பதாய் திறக்கின்ற
ஆலயத்தின்
கதவுகள்...!
விழித்திருந்தும்
தாயவளின் புடவையை
போர்வையாக்கிக் கொண்ட
சிறுவன்...!
விடியாத வானிலையில்
வீதியெங்கும்
வலம் வரும்
மானிடத்தின்
காதருகே வெப்பம்
தேடச் சொல்லும் - இக்
குளிர் காற்று...!
Subscribe to:
Posts (Atom)