Saturday, 15 February 2014

இயல்பு

வண்ணத்துப் பூச்சியின்
      இறகுகளிள் இயல்பாய்
வார்க்கப்பட்டிருந்த
      வண்ணத் திறல்...!

பூக்கள் தன்னில்
     சுமந்துகொண்ட
பனித்துளியின்
    இயல்பான அழகு...!

வெண் புறாக்களின்
     இறகுகளில்
குடி கொண்டிருந்த
     மென்மை...!

நேர்மையின் கருவறையை
      வாழச் செய்ய
நிஜ மகனையும்
      வதைத்து நின்ற
மனித இனம்...!

இவ் இயற்கையான
      படைப்புகளின் இயல்பினில்
இருத்தி வைக்கப்பட்ட
     அழகினை -- மறக்க
செய்யும் மனிதத்தின்
      செயற்கை வாழ்வு...!

No comments: