Wednesday, 5 February 2014

மீனாட்சி ஆலயம்



நீண்டு  நெடுந்திருந்த
    தாழ்வாரம் அங்கே
செதுக்கிவைக்கப்பட்ட - தமிழ்
    வீரப் பரம்பரை...!

வழியெங்கும் ஒலித்திருந்த
     கீதை - அங்கும்
தாயவளின் தோழியான
     கிள்ளைகளின் கீச்சுக்குரல்...!

தண்ணீரில்  - மிதக்கின்ற
      நிலவொளியில்
முகம் பார்க்கும்
      வெண் புறாக்கள்...!

பளிங்கிக் கற்களிளே
     பொரிக்கப் பட்ட
பிறைமுடி சூடியவனும்
     சக்தியாய் உருவானவளும்...!

எத்தனை ஆண்டுகளோ
     இத்தனை எழில்மிகு
சிற்பங்களின்
     வர்ணனைக்கு...!

எத்தனை மானுடமோ
       உளியெனும் ஆயுதத்தில் - இவ்
உலக அதிசயத்தை
       உருவாக்கியது...!

No comments: