Wednesday, 11 September 2013

பறவைகள்

பொங்குகின்ற நீறூற்றில்
       முகம் பார்க்கின்ற
வெண் புறா
       வெடுக்கென நீர்
எடுத்துச் சென்ற
       கருப்புருவம்...!


வில்லேந்தி ஓடிய
       வேடன் - விடிகின்ற
வேளையில் கானம்
       பாடி நின்ற குயில்...!


கூண்டுக்குள்ளே வைத்தாலும்
       கொஞ்சு தமிழ்
பேசுகின்ற பிள்ளை
       குறைவுடன் இருந்தாலும்
நிறைவினை எடுக்கின்ற
       அன்னம்...!


விடியலை வரவேற்று
       கொக்கரிக்கின்ற சேவல்
செவ்வானம்
       சிவக்கின்ற வேலையில்
தோகை விரிக்கின்ற
        மயில்...!

Thursday, 5 September 2013

ஆசான்

அன்னை என்ற
     வார்த்தை சொல்ல
அடிமனத்தில்
     விட்டு சென்ற
அன்பு மொழி
     வார்த்தை...!

கரையில்லா ஆடை
     கசங்காது
உடுத்தக் கற்றுக்
    கொடுத்த
நடத்தை...!

ஏழு மாடி
     கட்டிடம் இல்லாவிட்டாலும்
எழுந்து நின்ற
     அரச மரத்தில்
எழுதி சென்ற
      வீரனின்
வாள் முனையில்
      ஓட்டியிருந்த  நம்பிக்கை...!

தொடங்கிய வாழ்வின்
      தொடக்கப் புள்ளி
எங்கள் ஸ்பரிசத்தில்
     மண்ணின் உணர்வுகளை
விட்டு சென்ற
     ஒற்றை அகல் விளக்கு...!

Saturday, 31 August 2013

முதல் இரயில்

மூடிய முகம்
     காட்டி  சிரிக்கின்ற
சிறு குழந்தை
     மின்னல் ஒளியில்
முகமறைக்கின்ற
      தாய்...!

ஓடையில் ஒய்யாரமாய்
     பயணிக்கின்ற நிலவு
ஓடுகின்ற பாதையில்
      உருக்குலைந்திருந்த
மண் குதிரை...!

வானத்தின் வனப்பினை
      வாசலாக்கிய
தென்னையின் இணைவு
      கண்ணில் விழுகின்ற
கலையழகு பிம்பமாய்
      வீதியெங்கும்
விதைக்கப்பட்ட
      விடி விளக்கு...!

விட்டு விட்டு பொழிகின்ற
      வானிலை - இங்கே
வாழ்ந்திருந்த
      உணர்வுகளில்
உணரப்பட்ட
    மண்வாசனை...!

இருபுறமும்
     சூழ்ந்திருந்த இருளினை
அலங்கரிக்கும்
      விளக்காய்
நட்சத்திரக் கூட்டமிருக்க 
      சாரைப் பாம்பென
விரைந்திருந்த
     மின்தொடர் வண்டி -...!

Friday, 30 August 2013

புல்வெளி

முன்பனியில் முகம்
     புதைத்த முல்லை - அங்கே
முகம் காட்டும்
     கதிரவனின்
கனல் குறைத்த
    மூங்கில்...!

மிதக்கின்ற முகிலின்
    வேகத்தை குறைக்கும்
மலை முகடு - அங்கு
     ஆளுயற அணிகலனாய்
வரைந்திருந்த
     வானவில்...!

புன்னையில் உரங்குகின்ற
     முன்று நாமம்
சுமந்தவன் - சுழன்று
     காற்று அடித்தாலும்
அலைபாயாது ஓடுகின்ற
      ஓடை...!

அங்கும் இங்கும்
      ஆடித் திரிந்த
 பாட்டாம் பூச்சி - அங்கே
       ஆணவமும் அடிபணிய
நிறைவாய்
       நிலைத்திருந்த அமைதி...!

Saturday, 24 August 2013

வாழ்வு

துன்புருத்த நினைக்கின்ற
       சந்தோசம் தண்ணீரில்
மிதக்கின்ற சருகினில்
      வாழுகின்ற வாழ்க்கை...!

வாழுகின்ற வாழ்வு
     ஒறு முறைத்தான் - நாம்
ஓடுகின்ற பாதையும்
     ஒரு வழிதான்...!

எடுத்தது
      எடுத்ததாக இருக்கட்டும்
விடுத்தது
     விடுத்ததாக இருக்கட்டும்...!

எழுதி எழுதி
     அழிப்பதற்கு
வாழ்வு - இங்கு
    கரும்பலகையில்
எழுதுவதோ...!

அழிகிப்
      போகும் உடல்
அழிந்தாலும்
     அழியாத - நம்
ஆன்மாவில்
     எழுதுவது...!