கூண்டுக் கிளி
கூண்டுகளை உடைத்தெறிந்த
சுதந்திரத்தின் சந்தோசம்...!
கூட்டுப்புழு
உடலுக்குள் ஒட்டியிருந்த
இறகுகள் பிரித்து
பறக்கையில் சந்தோசம்...!
அன்னையின் அடிவயிற்றில்
சுமந்திருந்த பிள்ளையின்
தொப்புல் கொடி
அறுவதும் சந்தோசம்...!
சுமந்தவளின் சந்தோசத்திற்க்காக
சுமக்கின்ற சுமைகளின்
சஞ்சலங்களும் சந்தோசம்...!
மனிதத்திற்க்கு தன்னை
வதைக்கின்ற கட்டுப் பாடுகளை
தகர்த்தெறிவதும் சந்தோசம்...!
இவையெல்லாம்
வலியில் தொடங்கினாலும்
சந்தோசத்தின் வருகையை
வரவேற்க்கின்ற சந்தோசம்...!
Saturday, 15 September 2012
Saturday, 8 September 2012
வானவில்
வீசுகின்ற தென்றல்
வீணையில் இசை மீட்டி
அதிருகின்ற அதிர்வைப் போல்
மண் மீது மோதித் தெரிக்கின்ற
மழைத் துளிகள்...!
விட்டுவிட்டு பொழிகின்ற
சாரல்கள் சரீரத்தில்
சருக்குகின்ற
சங்கமத்தின் வருடல்கள்...!
அழகான மழைத்துளியின்
அன்பான அர்ப்பணிப்பில்
திளைத்து விட்ட
கதிரவனின் மெல்லிய
கதிர் வீச்சு...!
மோதிய மழைத் துளியில்
சிதரிய சிற்ப்பங்களாய்
பகலவனின்
கதிர் திரையில் தோன்றிய
வண்ணச் சிதறல்...!
Monday, 3 September 2012
மௌனம்
மாலையின் மௌனத்திற்க்கு
மயங்கி முகம் காட்டும்
வெண்ணிலவு...!
புல்வெளியின் மௌனத்தில்
புழுங்கிய மனதினிற்க்கு
ஆறுதல் தேடி அலைபாய்கின்ற
ஈரக்காற்று...!
தடு மாறிய குரலில்
பேசுகின்ற சிசுவின் மௌனத்தில்
முகம் சினுங்கும் தாயின்
முகம்...!
அதிகார வர்க்கத்திடம்
உரிமையை கூட முழங்காமல்
உள்ளுக்குள் ஊனமாகிப் போன
ஏழையின் மௌன மொழிகள்...!
மனதின் அழகினை
மௌனாமாய் மனிதத்திற்க்கு
உணர்த்துகின்ற உறைந்து போன
உள்ளத்தின் ஊமைக்குரல்...!
மயங்கி முகம் காட்டும்
வெண்ணிலவு...!
புல்வெளியின் மௌனத்தில்
புழுங்கிய மனதினிற்க்கு
ஆறுதல் தேடி அலைபாய்கின்ற
ஈரக்காற்று...!
தடு மாறிய குரலில்
பேசுகின்ற சிசுவின் மௌனத்தில்
முகம் சினுங்கும் தாயின்
முகம்...!
அதிகார வர்க்கத்திடம்
உரிமையை கூட முழங்காமல்
உள்ளுக்குள் ஊனமாகிப் போன
ஏழையின் மௌன மொழிகள்...!
மனதின் அழகினை
மௌனாமாய் மனிதத்திற்க்கு
உணர்த்துகின்ற உறைந்து போன
உள்ளத்தின் ஊமைக்குரல்...!
Saturday, 18 August 2012
ஓவியம்
வானத்தின் நீலத்தில்
வரையப்பட்ட வண்ண மலர்கள்...!
தென்றலின் சல சலப்பை
சிதரிய நிறங்களில்
நினைவூட்டும் அசைவுகள்...!
வெண்மை நிற ஆடையில்
ஓடுகின்ற வெள்ளோட்டம்...!
அமைதியான சூழலை
அனுபவமாக்கும் ஆலயம்...!
எழுகின்ற திசையில்
முகம் காட்டும் சூரியன்...!
ஒவ்வொன்றும் ஒப்பனையில்
ஒன்றாய் கலந்து விட்ட
ஒய்யார ஓவியம்...!
வரையப்பட்ட வண்ண மலர்கள்...!
தென்றலின் சல சலப்பை
சிதரிய நிறங்களில்
நினைவூட்டும் அசைவுகள்...!
வெண்மை நிற ஆடையில்
ஓடுகின்ற வெள்ளோட்டம்...!
அமைதியான சூழலை
அனுபவமாக்கும் ஆலயம்...!
எழுகின்ற திசையில்
முகம் காட்டும் சூரியன்...!
ஒவ்வொன்றும் ஒப்பனையில்
ஒன்றாய் கலந்து விட்ட
ஒய்யார ஓவியம்...!
Saturday, 11 August 2012
தேர் திருவிழா
தென்னையின் விளைவுகள்
வீதியெங்கும் விதைக்கப் பட்டு
ஆலய மணிகளுடன்
அலங்கறிக்க…!
வானவில்லின் வண்ணச்சிதறலும்
மின்மினிப் பூச்சியின்
மினுமினுப்பும்
அலங்கார விளக்காக…!
தெருவெங்கும் மனக்கின்ற
மல்லிகைப் பூ மாலையும்
இறைவனுக்கு படைக்கின்ற
வாசனை திரவியங்களும்...!
மகிழ்ச்சியில் சுவைக்கின்ற
மாவிளக்கு மாவும்
மனையினை அலங்கரிக்கின்ற
மாவிலை தோரணங்களும்...!
எரியூட்டப்பட்ட விளக்கு
கிழக்கே வெளுக்கின்ற வானம்
விடியலின் அறிகுறியென
ஆராவரிக்கின்ற
மனிதக் கூட்டம்…!
மின்னலும் இடியும்
இணைந்த சத்தத்துடன்
இருண்ட ஊருக்குள்
வளம் வருகிற
தெய்வ பவனி…!
வீதியெங்கும் விதைக்கப் பட்டு
ஆலய மணிகளுடன்
அலங்கறிக்க…!
வானவில்லின் வண்ணச்சிதறலும்
மின்மினிப் பூச்சியின்
மினுமினுப்பும்
அலங்கார விளக்காக…!
தெருவெங்கும் மனக்கின்ற
மல்லிகைப் பூ மாலையும்
இறைவனுக்கு படைக்கின்ற
வாசனை திரவியங்களும்...!
மகிழ்ச்சியில் சுவைக்கின்ற
மாவிளக்கு மாவும்
மனையினை அலங்கரிக்கின்ற
மாவிலை தோரணங்களும்...!
எரியூட்டப்பட்ட விளக்கு
கிழக்கே வெளுக்கின்ற வானம்
விடியலின் அறிகுறியென
ஆராவரிக்கின்ற
மனிதக் கூட்டம்…!
மின்னலும் இடியும்
இணைந்த சத்தத்துடன்
இருண்ட ஊருக்குள்
வளம் வருகிற
தெய்வ பவனி…!
Subscribe to:
Posts (Atom)

