தென்னையின் விளைவுகள்
வீதியெங்கும் விதைக்கப் பட்டு
ஆலய மணிகளுடன்
அலங்கறிக்க…!
வானவில்லின் வண்ணச்சிதறலும்
மின்மினிப் பூச்சியின்
மினுமினுப்பும்
அலங்கார விளக்காக…!
தெருவெங்கும் மனக்கின்ற
மல்லிகைப் பூ மாலையும்
இறைவனுக்கு படைக்கின்ற
வாசனை திரவியங்களும்...!
மகிழ்ச்சியில் சுவைக்கின்ற
மாவிளக்கு மாவும்
மனையினை அலங்கரிக்கின்ற
மாவிலை தோரணங்களும்...!
எரியூட்டப்பட்ட விளக்கு
கிழக்கே வெளுக்கின்ற வானம்
விடியலின் அறிகுறியென
ஆராவரிக்கின்ற
மனிதக் கூட்டம்…!
மின்னலும் இடியும்
இணைந்த சத்தத்துடன்
இருண்ட ஊருக்குள்
வளம் வருகிற
தெய்வ பவனி…!
No comments:
Post a Comment