வானத்தின் நீலத்தில்
வரையப்பட்ட வண்ண மலர்கள்...!
தென்றலின் சல சலப்பை
சிதரிய நிறங்களில்
நினைவூட்டும் அசைவுகள்...!
வெண்மை நிற ஆடையில்
ஓடுகின்ற வெள்ளோட்டம்...!
அமைதியான சூழலை
அனுபவமாக்கும் ஆலயம்...!
எழுகின்ற திசையில்
முகம் காட்டும் சூரியன்...!
ஒவ்வொன்றும் ஒப்பனையில்
ஒன்றாய் கலந்து விட்ட
ஒய்யார ஓவியம்...!
No comments:
Post a Comment