கூண்டுக் கிளி
கூண்டுகளை உடைத்தெறிந்த
சுதந்திரத்தின் சந்தோசம்...!
கூட்டுப்புழு
உடலுக்குள் ஒட்டியிருந்த
இறகுகள் பிரித்து
பறக்கையில் சந்தோசம்...!
அன்னையின் அடிவயிற்றில்
சுமந்திருந்த பிள்ளையின்
தொப்புல் கொடி
அறுவதும் சந்தோசம்...!
சுமந்தவளின் சந்தோசத்திற்க்காக
சுமக்கின்ற சுமைகளின்
சஞ்சலங்களும் சந்தோசம்...!
மனிதத்திற்க்கு தன்னை
வதைக்கின்ற கட்டுப் பாடுகளை
தகர்த்தெறிவதும் சந்தோசம்...!
இவையெல்லாம்
வலியில் தொடங்கினாலும்
சந்தோசத்தின் வருகையை
வரவேற்க்கின்ற சந்தோசம்...!

No comments:
Post a Comment