Saturday, 22 October 2011

உணரப்படா உழவு

தினமும் வியர்வைத்துளியால்
      வேகாத உடலும்
விதைக்காத
     விதை நெல்லும் முளைத்துவிட....

கானகத்தில் கலம் நின்று
     கருத்துவிட்ட கருணை உள்ளத்தின்
விலா எலும்பும் தோய்வுற்று
    தொல்லை கொடுக்க
கடுகடுக்கும் கால்களால்
     சேருமிதித்து நட்டுவிட்ட நாத்துகளும்
நா லுனாள் பெய்த மழையில்
     நலிந்து விட...

நடை தளர்ந்த காளை மாடும்
     கடும் உழைப்பில் களைப்பாற
காலமில்லாது களமிறங்கி
     பயர் வகையை விதைத்த பின்னும்
விதி விட்ட பாடில்லை
   விளையாடிய கார்மேகம் விரயம் செய்ய
ஒன்றிரண்டு செடிகல் ஓரமாய்...


பூ பூத்து காய்காக்க
     களைப்பறித்து கண்ணில் காத்து
அறுத்துவிட்ட அறுவடை நாளில்
     அறுவர் கொண்ட படை அதன்
தரம் பார்க்க தரிகெட்டு நின்றவனாய்...

தரணியில் தானாய் வாழத்
      தகுதி பெற்றவன் தடுமாறும்
தாறுமாறு உலகம்...

ஊருக்கே உணவலிக்கும்
      உழவனுக்கு உழுதுவிட்ட சேரும்
மட்டும்தான் மிச்சமோ
     சோருகூட எச்சமோ....

No comments: