Thursday, 14 July 2011

முரண்பாடு

பாலையில் 
       நீர் கேட்டு
வளரத்துடிக்கும் 
      ஈச்சம்புதராய் அவன்...!

சிறிது 
     நேர தாகத்தை
தாங்கிக் கொள்ளா 
     மணிப்புறவாய் அவள்...!

சிதறவிட்ட
    உமிழ் நீரில் 
வாழ்கிறது சிலந்தி...!

சிதறவிட்ட
    சிந்தனையில் 
வீழ்கிறது மனிதம்...!

பூக்கின்ற 
     பூக்கள் கூட
பூமியை 
   அழகாக்கிப்  பார்க்கின்றன...!

புதைபடும் 
      மனிதம் நாம்
புதைமண்ணை 
      புரட்டிபோட்டு
புண்ணாக்குகிறோம்
     புதுப்பொருளை உருவாக்கும்
புதைதிருந்த
     பழம் பொருளைத் தேடிதேடி...!


No comments: