Saturday, 7 July 2012

தியாகம்

எழுகின்ற சூரியன்
       துணை கேட்டு
சமர்ப்பனம் செய்யும்
       பனித்துளி...!

விழிகளில் விழுகின்ற
       கண்ணீரினை துடைக்கின்ற
துணைக்காக
       வாழ்கின்ற வாழ்வு...!

காதலெனும் கனவுகளில்
       கருகிவிட்ட
விட்டில் பூச்சி...!

தாய் மண்ணினை காக்க
       மரனத்தை மனக்கவும்
மயங்குகின்ற மனிதம்...!

Saturday, 30 June 2012

மாலை

பிறை நிலவு
      பிறந்த நேரம்
அதன் அழகு
    முகத்தை மறைக்க
நினைக்கின்ற மேகம்...!

ஜோடிப் புறா 
     வானமே தன் வசமெனப்
பறக்கின்ற பரபரப்பு...!

வெயிலின் வாட்டத்தின்
     வதை பாடு முடிந்ததென
தலையசைத்து கொண்டாடுகின்ற
      இலைத்துளிகலும்
துன்ப முடிவினை
      தூது கொண்டுவரும் தென்றல் காற்றும்...!

அன்பு மொழியினை
      பேசுகின்ற ஆலய ஓசைகளும்
அர்த்தமற்ற புறாக்களின்
      கீச்சுக் குரல்களும்
அழகான மாலையை
     அலங்கறிப்பதாய்...!

Sunday, 24 June 2012

தவறுதல்

அன்பு
      ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!

அறிவு
      காகிதம் அல்ல
கிழித்தெரிய...!

பாசம்
      பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!

நாட்கள்
        நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!

உண்மை
        உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!

இவைகளில்
         தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
          தவிர்க்க இயலாததே...!

Thursday, 21 June 2012

நிகழ்வு

மலர்

பூமியில் புதைந்திருந்த
        நீர்வலத்தில் நிறைந்த
உந்தன் புன்னகை....!

முட்கள்

வறண்டு போன பூமியில்
          வறண்டு போன உன் உதிரத்தில்
எழுந்த கோபம்...!

காதலன்

உந்தன் கோபத்திற்கு ஆலாகி
          புன்னகையை பரித்தான் தன்
புன்னகையை இழப்பதற்க்கு...!

Sunday, 10 June 2012

நிலவரம்

ஆயிரங்கள் கரைகின்றன
         ஆட்டத்தில் - ஏழைகளின்
அடிவயிறு பசித்திருந்தாலும்...!

நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன
         நடுத்தற மக்களின்
நரம்புத் துடிப்புக்கள்
         நடுக்கம் கண்டாலும்...!

ஊர் தலைவர்கள் உல்லசத்தில்
         உண்மையான உழைப்பின் உதிரங்கள்
உதாசினப் படுத்தப் பட்டாலும்...!

மாளிகைகள்
         மகுடம் சூட்டிக்கொள்கின்றன
இரக்கம் என்னும்
         இயல்பினை மறந்திருந்தாலும்...!