அன்பு
ஆயுதம் அல்ல
அழிப்பதற்க்கு...!
அறிவு
காகிதம் அல்ல
கிழித்தெரிய...!
பாசம்
பாசறை அல்ல
காயப் படுத்திக் கொள்ள...!
நாட்கள்
நரகம் அல்ல
நகர்த்திச் செல்ல...!
உண்மை
உறவுகள் உருவாவதில்லை
உண்மையாக இல்லாத வரை...!
இவைகளில்
தடுமாறும் போது
வாழ்வு தடம் மாறுவது
தவிர்க்க இயலாததே...!
No comments:
Post a Comment