Thursday, 1 May 2014

கோழை

செயலில் தெரிய வரும்
        தவறுக்காக
செய்யாமல்
        இருப்பதும்...!

கண் முன்
        தோன்றிய எதிர்ப்புகளுக்காக
கண் நீர்
        விடுவதும்...!

எழுதிய மை -  நம்மை
        சுடுமென நினைத்து
உண்மையை
        உரைக்காமலிருப்பதும்...!

உயிருக்கும்
       உறவுக்கும் பயந்து
அடிமையாய்
       வாழ்வதும்...!

கிளியிடம் கோழையாய்
       கூண்டுக்குள்
வாழச் சொன்னது
       மனிதனின் ஆசை...!

சுதந்திரமாய்
        மரத்தினில்
சுற்றித் திரிய சொன்னது
       இறைவனின் படைப்பு...!


Let it be, how god has created rather than forcing and making it as our slave

Saturday, 19 April 2014

வாக்குகள்



விழுகின்ற வருடங்களின்
    வர்ணனையை மாற்றிக்கொள்ள
விலைமதிப்பற்றதென நெஞ்சினில்
          எழுதிக் கொள்வோம்
அழிந்துபோகா மையினை
    விரல் நுனி சுமக்கும் முன்னே...!

ஆராவாரம் அடங்கிவிடும்
    அச்சடித்த காகிதங்களும்
தீர்ந்துவிடும்  -    தீராதது
            நம் கனவுகளே - அதனை
கரைசேர்க்கும்
     கரங்களுக்கு கைகொடுப்போம்
கட்டிய கோட்டையில்
            ஏழைக்கான குரலும் ஒலித்திருக்க...!

மந்திரக் கோல் -   உன்னிடமே
    மனி மகுடம்
சூடிக் கொள்வது
    மனிதத்தை மதிக்கின்ற
மானுடமாகட்டும்
    அச்சடித்த காகிதங்களை
ஆராதிக்கின்ற  
    அர்ச்சகர்களை விட...!

Wednesday, 16 April 2014

பலம்

வலியில்லாமல் வளர்ந்திருந்தால்
      வாடை காற்றில் கூட
நம் புன்னகை
      புதைந்துவிடும்...!

தோல்வி நம்மை
      தொட்டதில்லை என்றால்
தடுமாறிய கால்கள் கூட
       நம்மை தடம் புறட்டிவிடும்...!

ஏற்ற இரக்கங்கள்
      பாதை வழி
வந்ததில்லை எனில்
      காற்றில் மிதந்துவரும்
நெற்பதர் கூட
      நம்மை பாதாளத்தில்
தள்ளிவிடும்...!

தோல்வியும் இங்கு
      தேவைதான் - இல்லை
என்றவுடன் தெரியவரும்
      உண்மை முகம் - உன்னை
முடக்கிவிடாமல் இருக்க...!

Saturday, 5 April 2014

கடற்கரை

விளையாடிய
       குழந்தை தலை
சாய்த்து சிரித்தது
       நம்பிக்கையை தொலைத்து
நிம்மதி தேடிய
       ஜிவங்களின் அவநம்பிக்கை
தொலைந்து போக...!

கரை தாண்டிய
       ஆமை - தன்
புலன்களை அடக்கி
        தன்னை காத்திருந்தது - அங்கு
கரை ஒதுங்கிய
        கட்டு மரங்கள்
உழைத்துவிட்ட களைப்பில்
        உரங்கத் தொடங்கியது...!

வீசிய காற்றில்
       வளர்ந்துவிட்ட அலைகள்
கூட்டத்தின் கால்
        நனைத்து சென்றது - அங்கும்
வீனையில் தோன்றிய
        இசை வெள்ளம்
வீதி வழி ஓடியது...!

பவனிவந்த பகலவன்
        பணிவுடன் விடை
கேட்டு மறைந்தது
        பனிவிழும் இரவில்
வானும் கடல் நீலமும்
        கலக்கிற மையப் புள்ளியில்...!

Friday, 28 March 2014

அன்பு அழகாகியது

நீண்ட நாட்களுக்கு பிறகு அன்பினை அழகாய் காட்ட நினைத்த கலைஞனின் தரமான படைப்பு குக்கூ..

அன்பின் அழகு
     அழிவதில்லை - அது
அழுக்கு ஆடை
     மனிதர்களில்
ஓட்டிக் கொண்டாலும்...!

விரசமில்லா விருப்பத்தின்
      உன்னத உணர்வுகளை
காண்பித்த விடியல்
     அழகின் விலை பேசும்
திரையிடல்களின்
      மத்தியில்...!
  
அன்பின் உறவுகள்
      உறுத்துவதில்லை - அது
உதவுகின்ற உணர்வில்
      உருவாகிவிட்டதால்...!

இங்கு
      அழிக்க நினைப்பது
ஆசையானாலும்
      ஆதரிப்பது அன்பினில்
உருவாகும்
      ஆசிர்வாதங்களே..!