Thursday, 11 April 2013

போர் வீரன்

நெஞ்சில் குத்திய
        வாள் வலிப்பதில்லை
முதுகில் குத்திய
       முகங்கள் மறப்பதில்லை...!

ஒரு நிமிடம் உறவாகி
        மறு நிமிடம் எதிரியாகும்
சிக்கலான உறவுகளில்
        வாழாது  பிறந்த
மண்ணை முத்தமிட்டு
        உயிர் துறக்கத்
துணிந்தவன்...!

தீவினைத் தருவதானாலும்
       தரத்தினை இழக்கா
வாள் முனையை
       ஏந்தி நின்று
வதைக்கின்ற
       வல்லுருக்களுக்கு
விடை கொடுத்து
        வீரு நடை போட்டவன்...!

களத்தில் உயிர் பிரிந்தாலும்
       கண்ணிமைக்குள் காத்திருந்த
உறவுக்காக அவ்
       உயிர்களின் நினைவுடன்
இறப்பவன்...!

Saturday, 6 April 2013

விளங்கும்

பிறந்த நாளிளே
          இறந்தாலும்
இறகுகள் வலிக்க
         பறந்து பறந்து
வாழ் நாளை
         வசந்தமாக்கும்
மே பூச்சி...!

உடல் தாங்கும்
        இறகின்றியும் 
இயற்க்கை
       அமிர்தம்  படைக்கும்
தேனீக்களின் படை...!

 சிறு சிறு உருவமாய்
        சிதையாத உறவுகளில்
சித்தெறும்பு
        சிறுவளைக்குள்
சேர்த்து வைத்த
        சிறப்பியல்பு...!

தவறி கீழே
       விழுந்தாலும்
தன்னம்பிக்கையில்
        தன்னியல்புக்கு
திரும்புகின்ற
        சிலந்தி...!

வாழ்வதற்க்கு பலம் பெற
      கூட்டுக்குள் வாழ்ந்தாலும்
ஊண்மையான சுதந்திரத்தில்
       சுற்றித் திரிகின்ற
பட்டாம் பூச்சி...!

சிறு சிறு ஜிவனும்
       சந்தோசத்தின்
வழி காட்டியாய்
        மதிக்கின்ற அன்பினில்
மறக்க வேண்டிய
       விரோதத்தை...!

Friday, 5 April 2013

அன்பு

கேட்டு கிடைப்பதில்லை
        கிடைத்ததற்க்கு கேட்பதில்லை
ஒவ்வொறு ஊனுக்குள்ளும்
         உடைமைகளைத் தாண்டி
உணர்வுகள் தேடுகின்ற
         உன்னத மருந்து...!

இது இருக்குமிடம்
         தவறு நடப்பதில்லை
இல்லாதிடத்து தவறுகள்
         இல்லாமல் இருப்பதில்லை
சந்தோசம்
         இருப்பதற்க்கும்
இறப்பதற்க்கும்
         நிஜமான காரணி...!

அன்னையிடம் கிடைக்கின்ற
         எதிர் பார்க்கா அன்பு
நண்பர்களிடம் பெறுகிற
         எதார்த்த அன்பு
துனைவியிடம் தரப்பட்ட
         பகிர்கிற அன்பு
குழந்தைகளிடம் குடிகொண்ட
         அக்கறையான அன்பு - என
அன்பின் உருவம்
         மாறினாலும் மனிதம்
மறுக்காமல்
          ஏற்க்க நினைக்கிற
நிலயான ஆதாரம்...!

Friday, 29 March 2013

அடிமையா அவன்?

உயிர் பாதி இழந்தாலும்
         உறவுகள் வாழ
ஊருக்கு வெளியே
         உதிரம் கரைத்தவனின்
உடல் மட்டும்
         ஊர் வந்து சேர்ந்தது
மண்ணின்
          உடைமையென...!

வல்லுருவின்
          வலிமையில்
அனுப்பி வைத்த
          சவப் பெட்டிக்குள்
அடையாலம் காட்டிய
         தாயின் துயர ரேகைகள்...!

கருணையில்லா
       புகுந்த மண்ணும்
கண்டு கொள்ளா
       பிறந்த மண்ணும்
நீதி கேட்காமல் 
         நிதியனுப்பியது - அவன்
அடக்க
          சடங்கிற்க்கு...!

தினம் தினம்  சரிகிற
         சவப் பெட்டி குறையுமோ?
கொன்று குவித்த
          கொடுமையையும்
ஆதாயமாக்குகிற
          குறை மனதுடையவர்களால்...!

Saturday, 23 March 2013

கிழக்கே வெளுப்பு

மெல்ல மெல்ல
      மேற்கே தரையிறங்கிய
விடி வெள்ளி...!

விட்டு விட்டு பொழிகின்ற
       மென் பணிக்கு
மூடிய உடலின்
        மெய் சிலிர்ப்பு...!

தவறுகள் தனதாலும்
       ஏற்றுக் கொள்ளா
தண்டனைக்கு ஆள் தேடி
       கண்ணில் உருத்துகின்ற
எரிபூச்சிகள்...!

தனலாய் எறிகின்ற
         டீ கடை நெருப்பின்
உஷ்ணத்தில்
         உணர்கின்ற சுகம்...!

வெள்ளை புரட்சியை
        வளர்க்க வந்த ஜிவனின்
அன்னை அழைப்பும்
        அடையாளம் காட்டியது - அந்த
கிழக்கு வெளுப்பினை...!