Saturday, 20 October 2012

காட்சி

தூரலை துணையாக்கி
      துயிலெழுந்த காலை - அங்கே
குளிரினில் கோபுரத்தில்
       உடல் குறுக்கி நின்ற புறாக்கள்...!

மின்சாரமில்லா அரங்கத்தை
      மிரட்டுகின்ற அமைதி - மீள்வினையாய்
மழைத் துளியின் சந்தத்தில்
      கலந்துவிட்ட ஆலய மணியோசை...!

இயந்திரத்தின் அசைவுகளில்
      தினம் தினம் அருந்துபோகும்
ஒலி உணர்  உறுப்புகளின்
       உன்னத ஓய்வு...!

வறச்சியினை நீக்க வந்த
      நீல வானம் நிந்திக்காமல்
நிலமகளை நனைத்தாலும்
       வீதியில் வளம்வரும்
மனிதத்தின் எண்ணிக்கையில்
       ஏற்ப்பட்டு போன வறச்சி...!

மொத்தத்தில் - நம்
      மனம் மயங்கும்
மௌனம் மட்டும்
      வீதியெங்கும்...!

Sunday, 14 October 2012

முன் இரவு

கதிரவனின் கடை பார்வையினை
         காரிருள் மெல்ல
வெற்றி கொள்ளும் நேரம்...!

தன் உணர்விழந்து
        ஆட்டமிடுகின்ற
அணிப்பிள்ளையின்
        ஆனந்த கூச்சல்...!

தென்றலின் தழுவலில்
        தன்னை சமர்ப்பனம் செய்யும்
சருகுகளின் சலசலப்பு...!

அரை நிலா அறை முற்றத்தில்
        வளம் வந்து கொண்டிருக்க
வெண்மை மேகம் மெல்ல
        அதன் நாணத்தை
மறைப்பதற்க்கான முயற்ச்சி...!

முழு இருளும் அங்கில்லை
        வெளி முழுவதுமான
வெளுப்பும் அங்கில்லை
        வெற்றியும் தோல்வியும்
பரிமாரிக்கொள்ளும் அனுபவத்தில்
        அழிந்துபோகும் ஆனவமாய் - இந்த
பகளிருல் பாலம்...!

Saturday, 6 October 2012

கலப்பு

கண்ணீரும் கலகலப்பும்
       வலியும் வெற்றியும்...!

இரக்கமும் இருமாப்பும்
      பாசமும் வேசமும்...!

அன்பும் ஆத்திரமும்
      காதலும் காமமும்...!

சந்தோசமும்
      சருக்கிய பாதையின் வடுக்கலும்...!

மனித வாழ்வை நிறப்ப வந்த
      இரட்டை குழந்தைகளாய்...!

கண்ணீர் மட்டும்
      காலம் சொல்லும் கதையானால்
கரித்துப் போகும்
      வாழ்வு முழுவதும்
சந்தோசமானால் சலித்துப் போகும்...!

என்ற மகத்துவத்தாலோ
       இவ்வுணர்வுகளின்
கலப்பாய் கிடக்கிறது - இந்த
        மனித வாழ்வு...!

Sunday, 30 September 2012

நடைபாதை மாற்றம்

கனவுகளை காண்கின்ற
       சிந்தனையின் சிறகுகள்...!

ஊரின் நினைவுகளை
       நிறைவேற்ற நினைக்காத நிஜம்...!

சிதைத்தாலும் கூண்டுக்குள்
       வாழ நினைக்காத
நிந்தனைகள்...!

மனதில் தோன்றுகின்ற
        பரிவினை மறுக்காத மனம்...!

அன்னையின் இதயத்துடிப்பில்
       ஒட்டிவந்த அன்பின்
ஆழ்மன உணர்வுகள்...!

தடுமாரிய தடங்களை
       தட்ச்சணையாய் ஏற்கின்ற
எதார்த்த எண்ணங்கள்...!

முன்னேற்றத்திற்க்கு முன்னே
       உருத்துப் போன
வியர்வைத் துளிகளை
       மறக்க நினைக்காத
நினைவுகளின் நிஜ ஓவியங்கள்...!

Saturday, 22 September 2012

கவிதை

உள்ளத்தில் உறைந்திருக்கும்
        கருப்பொருளை கல்லறையில்
சேர்க்காத கனவுகளின்
        காகிதக் கிறுக்கல்கள்...!