ஆயிரங்கள் கரைகின்றன
ஆட்டத்தில் - ஏழைகளின்
அடிவயிறு பசித்திருந்தாலும்...!
நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன
நடுத்தற மக்களின்
நரம்புத் துடிப்புக்கள்
நடுக்கம் கண்டாலும்...!
ஊர் தலைவர்கள் உல்லசத்தில்
உண்மையான உழைப்பின் உதிரங்கள்
உதாசினப் படுத்தப் பட்டாலும்...!
மாளிகைகள்
மகுடம் சூட்டிக்கொள்கின்றன
இரக்கம் என்னும்
இயல்பினை மறந்திருந்தாலும்...!
Sunday, 10 June 2012
Saturday, 2 June 2012
வினாக்கள்
மனிதம் வளைந்து
செல்லும் வளைவு நெளிவுகள்
மனம் மயங்குகின்ற
மனிதத்தின் மனப்படிவுகள்...!
மனித உணர்வுகளின்
தொடக்கப் புள்ளியும்
நாளை விடியும்
என்று எதிற்பார்க்கும்
இதயத்தின்
முதற் துடிப்பும்...!
இவ்விடை தெரியா
வினாக்களுக்கு
விடை தேடுகின்ற
தேடலாய் வாழ்வு...!
செல்லும் வளைவு நெளிவுகள்
மனம் மயங்குகின்ற
மனிதத்தின் மனப்படிவுகள்...!
மனித உணர்வுகளின்
தொடக்கப் புள்ளியும்
நாளை விடியும்
என்று எதிற்பார்க்கும்
இதயத்தின்
முதற் துடிப்பும்...!
இவ்விடை தெரியா
வினாக்களுக்கு
விடை தேடுகின்ற
தேடலாய் வாழ்வு...!
Saturday, 19 May 2012
அன்னையர் தினம்
உந்தன் உதிரத்தில்
உருமாறியா உடல்...!
உந்தன் மூச்சிக்காற்றில்
சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!
உந்தன் முகம் பார்க்க
முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!
பசிப்பதற்கு முன்
பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!
நிஜ மனிதனாய்
நில உலகில்
நடமாட துடித்த
நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
நிஜதினமாய்...!
உருமாறியா உடல்...!
உந்தன் மூச்சிக்காற்றில்
சுவாசித்த எங்கள்
முதல் சுவாசம்...!
உந்தன் முகம் பார்க்க
முதலில் அசைந்த
எங்கள் கண் இமை...!
பசிப்பதற்கு முன்
பதறுகின்ற மனம்
அழுதவதற்குள் அள்ளி
அனைத்துக்கொள்ளும்
அன்பு உருவம்...!
நிஜ மனிதனாய்
நில உலகில்
நடமாட துடித்த
நாடித்துடிப்பினை
நினைக்கின்ற
நிஜதினமாய்...!
Saturday, 5 May 2012
கோடை
எழுகின்ற சூரியனின்
இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!
எற்றுக்கொண்ட தாகத்தை
வறண்டு போன
பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!
கண்ணிமைக்கும் நேரத்தில்
கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
மண்வாசனையும்...!
இருமாப்பில் வீசுகின்ற தென்றலில்
ஏற்ப்பட்டுப்போன வறுமை...!
எற்றுக்கொண்ட தாகத்தை
இறக்கிவைக்க
இழந்துவிட்ட பசுமை...!வறண்டு போன
பூமியில் வாசனை
தேடுகின்ற வண்ணத்துப் பூச்சி...!
கண்ணிமைக்கும் நேரத்தில்
கொட்டிவிட்டு செல்கின்ற
மழைத்துளியும்
மண்ணை தொட்டவுடன்
தொடங்கி வைக்கின்ற
மண்வாசனையும்...!
Sunday, 22 April 2012
வானம்
தூசுத் துகள்களின்
தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
தழைக்கின்ற தரணி...!
மேகத்துக்குள்
முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
நானத்தின்
திரைச் சீலை நீ...!
மனித இனம்
உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
வாழ்வு கரையாமலிருக்க...!
தஞ்சம் நீ உந்தன்
கண்ணீர்த் துளீயில்
தழைக்கின்ற தரணி...!
மேகத்துக்குள்
முகம் மறைக்கும்
வெண்ணிலவின்
நானத்தின்
திரைச் சீலை நீ...!
மனித இனம்
உடுத்தியிருக்கின்ற
உணரமுடியா உடையும் நீ
கதிர் வீச்சு எனும்
கரையானில் எங்கள்
வாழ்வு கரையாமலிருக்க...!
Subscribe to:
Posts (Atom)
