Saturday, 31 March 2012

தென்றல்

தென்றலின் வருடல்
    தாய் மடியின் புரலல் போல்
தடம் புரியாமல்
    பெறப்பட்ட சுகம்...!

உன் தழுவலில்
    மனத்தின் தனங்கள்
தணியும் மருத்துவம்
    எங்கு கற்றாயோ...!

நீ தழுவி வந்த
    சுகந்தங்களின் வாசனை
எந்தன் மேலும் உந்தன்
        வருடலின் அடையாலமாய்...!

நீ திரிகின்ற திசையெலாம்
    சுற்றித்திரிய ஆசை
நலிந்துவிட்ட சாபத்தில் உந்தன்
    வருடல் மட்டும் வரமாய்...!

Saturday, 24 March 2012

இரவு

உயிர் உறைகின்ற நிசப்தம்
      நிஜம் கரைகின்ற கனவு
நிழல் தொடர்கின்ற நினைவு...!

மரண ஓலத்தை
      ஒலிக்கின்ற பறவை
சருகுகள் சலசலக்கும்
      சத்தத்தில் மறைகின்ற சர்ப்பம்...!

ஊளையிடுகின்ற நரியின்
      நரகக் குரல்
பதருக்கின்ற மனதிர்க்கு
      பாதை காட்டுகின்ற நிலவொளி...!

Saturday, 17 March 2012

வெற்றி

வாழுகின்ற காலமட்டும்
    வழுக்காத பாதையில்
நடக்காத பாதச்சுவடுகள்
    இல்லாது இருந்தாலும்...!

எடுந்து வைக்கின்ற
    பாதத்திற்க்கு பனிகின்ற
பனித் துளியாய்
    இந்த வெற்றி...!

கானல் வரும் போது
    காணாமல் போனாலும்
கற்று கொண்டவை
    கலங்கறை விளக்காய்

வாழுமட்டும்...!

Saturday, 10 March 2012

மங்கை

கடவுளின் வலிமயற்ற       
      படைப்பு அவளெனினும்
கண்ணீர்த் துளிக்கு இங்கே
      குருச்சேத்திரப் போர்...!

பொறுமை என்னும்
      போர்வை போர்த்தியிருப்பினும்
கோபத்தில் எரிக்கப்பட்ட
       மதுரை இங்கே...!

மனித இன உணர்வுகளின்
       கருவறை  - அவள்
உறவுகளின் பிணைப்பில் வாழ்ந்து
      உண்மையான அன்பினை
உலகிற்க்கு அளிக்க...!


சிறுமியாய் வாழத் தொடங்கி
       சிதைந்து போகும் வரை
ஏற்றுக்கொண்ட வேசம்
       எதுவானாலும்
அன்பெனும் ஆலம்
      விழுதினை விதைக்க
மறக்காத மானுடம்...!

Wednesday, 29 February 2012

அநாவசியம்


உந்தன் இமைக்கு அருகில்
      உலகின் உலைக்கலம்
சுழலும் போது
      உருகுகின்ற உள்ளம் உனக்கெதற்கு...!

நாளை கூட நிலையில்லை
     எண்ணும் பொழுது
நடுங்குகின்ற கால்கள்  எதற்கு...!

கனிவான உள்ளம் கூட
      காயப்படும் போது
எதிர் காலக் கனவெதற்கு...!

கண்கள் செல்கின்ற பாதையில்
      சென்றால் உன் கனவுகள் கூட
கரைக்கப் படும்...!

மனதை இருகவிடு
      மதியின் வலிமையில்
 உந்தன் ஆன்மாவின்
       உண்மை பொருள் தேட ...!