Saturday, 10 March 2012

மங்கை

கடவுளின் வலிமயற்ற       
      படைப்பு அவளெனினும்
கண்ணீர்த் துளிக்கு இங்கே
      குருச்சேத்திரப் போர்...!

பொறுமை என்னும்
      போர்வை போர்த்தியிருப்பினும்
கோபத்தில் எரிக்கப்பட்ட
       மதுரை இங்கே...!

மனித இன உணர்வுகளின்
       கருவறை  - அவள்
உறவுகளின் பிணைப்பில் வாழ்ந்து
      உண்மையான அன்பினை
உலகிற்க்கு அளிக்க...!


சிறுமியாய் வாழத் தொடங்கி
       சிதைந்து போகும் வரை
ஏற்றுக்கொண்ட வேசம்
       எதுவானாலும்
அன்பெனும் ஆலம்
      விழுதினை விதைக்க
மறக்காத மானுடம்...!

Wednesday, 29 February 2012

அநாவசியம்


உந்தன் இமைக்கு அருகில்
      உலகின் உலைக்கலம்
சுழலும் போது
      உருகுகின்ற உள்ளம் உனக்கெதற்கு...!

நாளை கூட நிலையில்லை
     எண்ணும் பொழுது
நடுங்குகின்ற கால்கள்  எதற்கு...!

கனிவான உள்ளம் கூட
      காயப்படும் போது
எதிர் காலக் கனவெதற்கு...!

கண்கள் செல்கின்ற பாதையில்
      சென்றால் உன் கனவுகள் கூட
கரைக்கப் படும்...!

மனதை இருகவிடு
      மதியின் வலிமையில்
 உந்தன் ஆன்மாவின்
       உண்மை பொருள் தேட ...!


Saturday, 25 February 2012

வேற்றுமை

நிஜத்துக்கும் நினைவுக்குமான தூரம்
    நாளைக்கும் இன்றுக்குமான நீளம்...!

மனிதத்தால் வாழ முடிவது
    வலிமையான நிஜத்தால் மட்டுமே
வலிமையற்ற வெற்று
    வார்த்தைகளால் அல்ல...!

இருள் வந்தால்
    நிழல் விலகும்
இமை மூடினாலும்
    நிஜம் அருகினிலிருக்கும்...!

Friday, 17 February 2012

முதிர் கன்னி

வயதின் முதிர்வாலும்
       வருமையின் வளத்தாலும்
விழிகளின் விளிம்பினில்
      வழிகின்ற கண்ணீரில்
கரைகின்ற அவளுடைய
      நம்பிக்கை.....


Wednesday, 15 February 2012

ராணுவம்

கல்லினுல் ஊர்ந்தாய் எங்கள்
      கண்களில் கண்ணீர் துளி
கலங்காமலிருக்க...!

மலை முகடுகளில்
      சுற்றித்திறிந்தாய் எங்கள்
சுதந்திரம் பறிபோகாமலிருக்க...!

கடும் வெயிலிலும் குளிரிலும்
      தவமிருந்தாய் நம்
தடங்களை காப்பற்றி க் கொள்ள ...!

தாய் மண்ணைக் காக்க
      உயிர் துறந்தாய் மண்ணின்
தரமான படைப்பென்று... !