Friday, 20 January 2012

தானே புயல்

பூமித்தாயின் பெருமூச்சா - நீ
       எங்களின் புன்னகையை
பறித்துக் கொண்டு இருக்கிறாய்.....

அவளின் கண்ணீர் துளியா
       இந்த மழை
மக்களின் மனக் கோட்டையை
      மூழ்கச் செய்தது....

தனியாய் வந்து
      தனிமையை கொடுத்தும்
உடைமைகளை பறித்துக்கொண்டு
     உயிர் மட்டும் விட்டு த்
தடம் பதித்த
    தரிகெட்ட ஆற்றலாய்......

Friday, 6 January 2012

மயக்கம்

உலகத்தின் அனைத்தையும்
      வலிமையால் பெற்றுவிடலாம்
உண்மையான உறவைத் தவிர.....

வெற்றியை பெற்ற வீரனென
      வீதியில் வலம் வரலாம் ஆனால்
உண்மையான உள்ளத்தை
      வெல்ல இயலாது.....

அயிரத்தில் ஆசை அணுக்கலை
      ஆடக்கி விடலாம்
அன்பான ஆறுதல் கிடைக்காது......

ஆசையை விதைத்தால் அங்கே
       அன்பை அறுவடை செய்ய இயலாது.....

மண்ணில் பிறந்த
       மனிதம் மயங்குவது தன்
உண்மை உறவுகளை
      அறிய முடியாததால் தான்.......

Friday, 30 December 2011

விலைவாசி

பயணிக்கின்ற பேருந்தில் கூட
   மக்களின் பெருமூச்சி - இந்த
 நிலையற்ற அரசின்
     நெறியற்ற நிபந்தனைகளால்....

எரிகின்ற  எரிபொருலிள் கூட
       எரிக்கப்படுகின்றன அவர்களின்
சந்தோச நிமிடங்கள்.....

தொழில் துறையில்
      சாதிக்கத் துடிக்கும் உணர்வுகள்
நொறுக்கப்படுகின்றன   அந்த
     அந்நிய செலவாநிஎனும்
அச்சுறுத்தும் ஆலம் விழுதுகளால்...

ஆனால் - மனிதத்தை
     நிலை தடுமாற வைக்கும்
மயக்கங்கள் மட்டும்
     மகுடம் சூட்டப்படுகின்றன
கலி உலகினை நினைவுபடுதுவதாய்...

Saturday, 24 December 2011

முகாம்

உன்னில் ஒளிந்திருக்கும்
     உண்மை உணர்வுகளை
உணருகின்ற வாய்ப்பாய்......

கண்ணில் விழுகின்ற
    தூசிதனை துடைக்கின்ற
கருவறைப் பள்ளியாய்....

சிந்தனையின் சிறகினை
    சிற்ப்பிக்குள்ளே இருந்து
சிதைத்துவிட்ட சிற்பியாய்....

வானத்தின் வனப்பை
    வண்ணமுடன் காட்டி
வாழ்த்துகின்ற வள்ளலாய்.....

எரிகின்ற விளக்கின்
    திரிகளைத் தூண்ட
நினைக்கின்ற நிஜமாய்.....

Saturday, 17 December 2011

அறியாமை

 அறியாமை ஆனாலும் நம் சந்தோசத்தின் ஆதாரமாய்......

வண்ணத்துப் பூச்சியின்
       வண்ணத்தில் இரகசியமில்லையேல்
வியப்பில்லை அது நமக்கு....

தாலாட்டும் தென்றலின்
      திசை தெரிந்தால்
திகைப்பில்லை நமக்கு....

எங்கிருந்தோ வருகின்ற அந்த
     ஒற்றைப் பாடலின்
உள்ளிருப்பு சோகம்
      உணர்ந்திருந்தால் உணர்வுகள்
கிளர்வதில்லை...

இயங்குகின்ற இயந்திரம் நம்
       பாடலுக்கு இசையாகும்
இயல்பினை அறிந்திருந்தால்
       ஆச்சரியமில்லை அது நமக்கு...

மலர்களின் பிறப்பும்
      மாலையின் இறப்பும்
மங்கையின் வனப்பும்
     மலைமுகட்டின் செழிப்பும்
காரணம் அரியப்பட்டிருந்தால்
     நம் மனதுக்குள்
நாமறியாத அந்த
     துள்ளல் இல்லை...