Sunday, 4 December 2011

எத்தனை மனிதர்கள்

மரம் போன்று
     எல்லாத்தையும் எவருக்கும்
அளிப்பவர்கள்...

கொடி போல
     என்றும் அடுத்தவரை
சார்ந்திருப்பவர்கள்....

பூக்களைப் போல
     பூமியில் சிலநேரம் வாழ்ந்தாலும்
சிலிர்க்க வைப்பவர்கள்....

கற்கண்டு போல
     எந்நேரமும் இனிப்பானவர்கள்....

பாகற்க்காய் போல
     கசந்தாலும் உள்ளுக்குள்
வளர்ச்சிக்கு உரமிடுபவர்கள்.....

பலாவை போல்
     வெளிமுரட்டில்
உள்மிருதுவைக் கொண்டவர்கள்....

வாழையைப் போல
    வாழையடிவாழையாய் வாழவைத்து
வாழ்பவர்கள்.....

கானல் நீர் போல
      கற்பனையில் மிதப்பவர்கள்.....

இயற்க்கையைப் போல
      இயல்பில் மாறாதவர்கள்....

இப்படி எத்தனை
      எத்தனையோ மனிதம்
பூமியை அழகாக்கியும்
      அழிவுக்கு கொண்டு சென்றும்.......

Friday, 2 December 2011

விளையும்

ஆசை அழிவுக்கு
     இட்டு செல்லும்...

அறிவு அன்பைத்
     தேடி ஓடும்.....

உண்மை உறவுகளையும்
     பிரித்துப் பார்க்கும்.....

ஊமை உணர்வுகளை
     கட்டி வாழும்.....

கண்ணீர் கனவுகளைக்
     கரைத்து விடும்....

காதல் நிஜ உலகினையும்
     மறக்கச் செய்யும்.....

நட்பு நடக்கின்ற பாதையையும்
     நல்வழி படுத்தும்...
.

Friday, 25 November 2011

கடற்கரை

ஈரத்தை சுமந்த காற்றின்
      மெல்லிய வருடல்...

கண் இமைக்கும் பொழுதில்
      கால்களை நனைத்து செல்கின்ற
கடல் அலை.....

அந்த வானத்தை வருடுகின்ற
      நீரின் நீல நிற தோற்றம்....

பேரலை வந்தாலும்
     ஒய்யாரமாய் நிற்கின்ற
மனித வாகனம்.....

அலையால் கரையை தொட்டாலும்
      அடுத்த நிமிடம்
மண்ணுக்குல் புதைகின்ற
      மண்ணுயிர்கள்....

முத்தையே சுமந்தாலும்
      கரையில் எறியப்படுகின்ற
கிளிஞ்சல்கள்.....

சுற்றிவந்த களைப்பில்
     ஓய்வெடுக்கின்ற கரையோர
கட்டு மரங்கள்...

வாழ்வின் இறுதிவரை ஓடினாலும்
     வாழப்போகின்ற நம்பிக்கை கொடுக்கும்
கலங்கறை விளக்கு....

Saturday, 19 November 2011

மழை

மேகத்தை 
    துரத்திதுரத்தி
வலிமை 
    காட்டும் காற்று...!

மெல்ல மெல்ல
        தரையிறங்கிய
மின்னல் ஒளி
       விட்டுச் சென்ற
ஒளிச் சிதறல்...!

மண் வாசனையை
    விதவிதமாய்
துவக்கி வைக்கும்
    மண் மழையின்
கலப்பு...!

வானிலை 
      மாற்றத்தில்
துள்ளிக் குதித்து
      ஓடுகின்ற
காளைக் கன்று...!

தாய் பறவையின்
      கதகதப்புக்கு
சிறகுக்குள்
      புகுந்து கொண்ட
சிறு பறவை...!
புதிதாய்
       குடை பிடித்த
வெண் காளான்களும்
        அதனருகே
 மழைக்கு ஒதுங்க
      ஒன்று சேர்ந்த 
சித்தெறும்புக்
       கூட்டமும்...!

சாரலில் 
     சுருண்டாலும்
உயிர் கொடுத்த  
     மழைநீருக்கு
புன்னகையில் 
    நன்றி கூறி
கண்ணீர் தாங்கும்
    புதுப்பூக்கள்....!

எழுகின்ற வானில்
        எங்கள் குலம்
வாழ்ந்து கிடக்க
       வானம் பார்த்து
தலை வணங்கி
       நின்றிருந்த 
உழவுக் கூட்டம்...!

அங்கே
      குடிசைக்குள்ளிருந்து
ஒற்றைக் கண்
      மூடி சிரித்த
சிறுவன்...!



Friday, 18 November 2011

அதி காலை

பனித்துளியுடன் புல்வெளி அங்கே
      பறந்து செல்கின்ற
பட்டாம் பூச்சி...!

எழுகின்ற சூரியனின்
    முகப் பொலிவினை
மூடிய கருப்புத் திரையை
     கிழித்துக் கொண்டு வந்த
மெல்லிய கதிர் வீச்சு...!

கொடுத்து விட்ட குரலிள்
      இருள் விலகுவதாய்
கொக்கரிக்கின்ற சேவல்...!

இரவு மீதான பகலின் வெற்றியை
      தம் பல குரல் காட்டி
ஆராவரிக்கும் பறவைகள்...!

நிசப்த நிலமாய்
     நிஜமான ஆற்றலை
உயிரினத்துக்குள் புகுத்துகின்ற இந்த
     அழகான காலை...!