Wednesday, 1 January 2014

அன்னை தெராசா

ஏந்திய கரங்களை
       இறக்கியதில்லை
எச்சில் வந்து
      விழுந்த போதிலும்...!

இளகிய மனம்
       எற்றுக்கொண்ட
தண்டனையில்
     அன்னையானால் - இவ்
எடுத்தெறியப்பட்ட
     குழந்தைகளின்
எதிர்காலமாய்...!

அவள் தாழ்த்திக்
       கொண்ட கெளரவத்தில்
வாழ்ந்திருக்கிறாள் - இன்றும்
      ஆருயிர்கள் வாழ
வேண்டிய பாதையின்
      அர்த்தமாக...!

No comments: