Sunday, 27 October 2013

ஈர்ப்பு விசை

Gravity என்னும் படம் உண்டாக்கிய சிதறல்...

மண்ணில் வாழ்வதே
       சொர்க்கம் என்றது
விண்ணில் வாழ்ந்துவிட்ட
       வாழ்க்கையில்...!

இருக்க இடம் தேடி
      கொட்டிய கோடிகள்
போதுமென்றது
      இருப்பதே
அன்பினில் உருவான
      கருவறை
என்று சொல்லி...!

Saturday, 26 October 2013

மின்னல்

இமைக்கின்ற நொடிப்
      பொழுதில்
நிழல் விழுகின்ற
     தூரத்தில்...!

மண் கரைக்கும்
      மழை மேகம்
ஏற்றுக்கொண்ட
      மோதலுக்கு
எடுத்துவிட்ட நிழற்ப்பட
      ஒளியாய்...!

Friday, 25 October 2013

மறதி

அருகிலிருக்கும்
      சுரிய ஒளியில்
மறைந்து போகும் - அந்
      நட்சத்திரக் கூட்டம்...!

அள்ளி அனைக்கின்ற
       தாயின் அன்பில்
மறந்து போகும் - இவ்
       எத்தனை நெருடல்களும்...!

Monday, 21 October 2013

ஒற்றுமை

நேசமில்லா உறவுகளின்
      நெருக்கமும்
வாசனையில்லா மலர்களின்
      மென்மையும்
ஒன்றுதான்...!

ஒன்று அருகிலிருந்தும்
       ஆதரவற்றது
மற்றொன்று
       மகரந்தம்
சேர்க்கா மலடுகள்...!

Saturday, 19 October 2013

சுதந்திரம்

புதிதாய் பிறந்துவிடு
       தோல்வி உன்னை
அரவணைக்கையில் - இல்லையெனில்
       உலகம் உன்னை - அங்கேயே
புதைத்ததுவிடும்...!

அவநம்பிக்கையில்
     வாழுகின்ற
பயணத்தை விட
     நம்பிக்கையில் நடக்கின்ற
கனவுகள்
     கலங்கமற்றது...!

ஏற்றுக் கொள்பவை
      உறவாகட்டும்
எதிர்க்க நினைப்பவை
      உடல் பிரியட்டும்
இப்பயணத்தின்
     சுமை குறைத்திட...!

சுடுமணலில்
      நடக்க சொல்லும்
சுற்றத்தை விட
     சுதந்திரத்தின் உறவுகள்
சுகமானது...!

Monday, 14 October 2013

இருப்பவை

வண்ணங்களின் இருப்பதில்லை
       இவ்-வாழ்வு - அது
வளமான மனதினில்
       வளர்ந்து நிற்பது...!

நிரப்பி விட்ட
      பொருட்களில் இருப்பதில்லை
இச்-சந்தோசம் - அது
      நிரைவான மனதினில்
புகுந்து கொண்டது...!

போட்டியிட்ட
      பாதையில் இருப்பதில்லை
இந்-நிம்மதி - அது
      போற்றுகின்ற உறவினில்
உறைந்திருப்பது...!

அடுக்கிவைத்த
      எதிர்பார்ப்பினில் இருப்பதில்லை
இவ்-அன்பு - அது
      ஆதரிக்கின்ற
அணுக்களின்
       ஆரம்பப்புள்ளி...!

Saturday, 12 October 2013

வறையரையில்லா

மூன்று நாள்
     பெய்திருந்த மழையில்
முல்லை நிலத்தின்
     வனப்பு...!

மழை வெயில்
      சேர்கின்ற வேளையில்
உடல் சிலிர்க்கும்
      வெண் புறாக்கள்...!

உள்ளிருந்து உதித்து
      வெண்மேகத் தோணியில்
வலம் வருகின்ற
      வெண்ணிலவு...!

மூவாயிரம் ஆண்டுகள்
      உயிர் வாழுகின்ற - என்
தாய் மொழியான
      தமிழ்...!

என்றுமே நீங்கள்
      அழகுதான் - எங்கள்
இளமையென்னும்
      வரையறையில்லாமல்...!