Wednesday, 16 April 2014

பலம்

வலியில்லாமல் வளர்ந்திருந்தால்
      வாடை காற்றில் கூட
நம் புன்னகை
      புதைந்துவிடும்...!

தோல்வி நம்மை
      தொட்டதில்லை என்றால்
தடுமாறிய கால்கள் கூட
       நம்மை தடம் புறட்டிவிடும்...!

ஏற்ற இரக்கங்கள்
      பாதை வழி
வந்ததில்லை எனில்
      காற்றில் மிதந்துவரும்
நெற்பதர் கூட
      நம்மை பாதாளத்தில்
தள்ளிவிடும்...!

தோல்வியும் இங்கு
      தேவைதான் - இல்லை
என்றவுடன் தெரியவரும்
      உண்மை முகம் - உன்னை
முடக்கிவிடாமல் இருக்க...!

Saturday, 5 April 2014

கடற்கரை

விளையாடிய
       குழந்தை தலை
சாய்த்து சிரித்தது
       நம்பிக்கையை தொலைத்து
நிம்மதி தேடிய
       ஜிவங்களின் அவநம்பிக்கை
தொலைந்து போக...!

கரை தாண்டிய
       ஆமை - தன்
புலன்களை அடக்கி
        தன்னை காத்திருந்தது - அங்கு
கரை ஒதுங்கிய
        கட்டு மரங்கள்
உழைத்துவிட்ட களைப்பில்
        உரங்கத் தொடங்கியது...!

வீசிய காற்றில்
       வளர்ந்துவிட்ட அலைகள்
கூட்டத்தின் கால்
        நனைத்து சென்றது - அங்கும்
வீனையில் தோன்றிய
        இசை வெள்ளம்
வீதி வழி ஓடியது...!

பவனிவந்த பகலவன்
        பணிவுடன் விடை
கேட்டு மறைந்தது
        பனிவிழும் இரவில்
வானும் கடல் நீலமும்
        கலக்கிற மையப் புள்ளியில்...!

Friday, 28 March 2014

அன்பு அழகாகியது

நீண்ட நாட்களுக்கு பிறகு அன்பினை அழகாய் காட்ட நினைத்த கலைஞனின் தரமான படைப்பு குக்கூ..

அன்பின் அழகு
     அழிவதில்லை - அது
அழுக்கு ஆடை
     மனிதர்களில்
ஓட்டிக் கொண்டாலும்...!

விரசமில்லா விருப்பத்தின்
      உன்னத உணர்வுகளை
காண்பித்த விடியல்
     அழகின் விலை பேசும்
திரையிடல்களின்
      மத்தியில்...!
  
அன்பின் உறவுகள்
      உறுத்துவதில்லை - அது
உதவுகின்ற உணர்வில்
      உருவாகிவிட்டதால்...!

இங்கு
      அழிக்க நினைப்பது
ஆசையானாலும்
      ஆதரிப்பது அன்பினில்
உருவாகும்
      ஆசிர்வாதங்களே..!

Friday, 21 March 2014

நிம்மதி



நீண்ட துரம்
    பயணிக்கின்ற பாதையில்
நினைவுகள் இளைப்பாற
    தேடுகின்ற நிழலாக
நிம்மதி...!


சேர்த்துவைத்த பொருட்களில்
    தொலைந்து போனாளும்
பிறருக்காக செலவழிந்த
    நிமிடங்களில் நிலைத்திருக்கும்
நிம்மதி...!


எவருக்கோ கிடைத்தது
        எனக்கென எழுகின்ற
எண்ணத்தில்  - நம்மிலிருந்து
        எடுத்தெரியப்பட்டாலும்
வாழ்வின் இயல்புகளை
         ஏற்றுக்கொண்டு
முன்னோக்கி செல்லும்
        முயற்சியில் - ஓடி வந்து
நம்மில் ட்டிக்கொள்ளும்
        நிம்மதி...!

Wednesday, 12 March 2014

விழுவதும் இங்கு எழுவதற்கோ!



விழுந்த விதை
   மண்ணில் முட்டி
மரமாகியது...!

விழுந்த மழை
   பூமியின் தாகம்
தணித்தது...!

விழுகின்ற கண்ணீர்
   வலியின் வேதனையை
விட்டொழிக்கிறது...!

விழுகின்ற குழந்தை
   எழுகையில் - அன்னையுடைய
நம்பிக்கையின் நரம்புகளுக்கு
   உயிரூட்டுகிறது...!

விழுவதும் இங்கு
       எழுவதற்க்கோ!
வாழ்வின் விட்டுபோன
       பக்கங்களை
வீசிய காற்றிலாவது
       புறட்டிவிட்டு – அக்
காற்று கூட
   அதிர்ந்துபோக - நம்
வாழ்வுக்கு
       வளுவூட்டிக் கொள்ள...!