Friday, 21 March 2014

நிம்மதி



நீண்ட துரம்
    பயணிக்கின்ற பாதையில்
நினைவுகள் இளைப்பாற
    தேடுகின்ற நிழலாக
நிம்மதி...!


சேர்த்துவைத்த பொருட்களில்
    தொலைந்து போனாளும்
பிறருக்காக செலவழிந்த
    நிமிடங்களில் நிலைத்திருக்கும்
நிம்மதி...!


எவருக்கோ கிடைத்தது
        எனக்கென எழுகின்ற
எண்ணத்தில்  - நம்மிலிருந்து
        எடுத்தெரியப்பட்டாலும்
வாழ்வின் இயல்புகளை
         ஏற்றுக்கொண்டு
முன்னோக்கி செல்லும்
        முயற்சியில் - ஓடி வந்து
நம்மில் ட்டிக்கொள்ளும்
        நிம்மதி...!

Wednesday, 12 March 2014

விழுவதும் இங்கு எழுவதற்கோ!



விழுந்த விதை
   மண்ணில் முட்டி
மரமாகியது...!

விழுந்த மழை
   பூமியின் தாகம்
தணித்தது...!

விழுகின்ற கண்ணீர்
   வலியின் வேதனையை
விட்டொழிக்கிறது...!

விழுகின்ற குழந்தை
   எழுகையில் - அன்னையுடைய
நம்பிக்கையின் நரம்புகளுக்கு
   உயிரூட்டுகிறது...!

விழுவதும் இங்கு
       எழுவதற்க்கோ!
வாழ்வின் விட்டுபோன
       பக்கங்களை
வீசிய காற்றிலாவது
       புறட்டிவிட்டு – அக்
காற்று கூட
   அதிர்ந்துபோக - நம்
வாழ்வுக்கு
       வளுவூட்டிக் கொள்ள...!

Friday, 7 March 2014

அஞ்சரைப் பெட்டி



கேட்டது எதுவானாலும்
    அவள் கேட்க மறுக்கா
ஆயுதமாய் அறுசுவையை
    கூட்‌டவல்ல - இவ்
அஞ்சரைப் பெட்டி...!

மண் கூட்டி
    விளையாடும்
சிறுமிகளும் மறக்காமல்
    சித்தரிக்கும்
மணி மகுடம் - இவ்
    அஞ்சரைப் பெட்டி...!

மாடி வீட்டு
    ஜன்னல் வழியும்
ஓலை வீட்டு
    வாசல் வழியும்
வேற்றுமை இல்லாது
    வீசுகின்ற வாசனையின்              
சொந்தக்காரன் - இவ்
    அஞ்சரைப் பெட்டி...!

அயிரம் மைல்  தாண்டினாலும்
        அன்னையின் கைதேர்ந்த - அவள்
அன்பினில் அரைத்தெடுத்த
        கலவையை அலுக்காமல்
சுமந்து செல்லும் - இவ்
       அஞ்சரைப் பெட்டி...!

Monday, 24 February 2014

வாழ்வு வளம் பெற



ஒரு மாணவன் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவன் கூரிய உண்மையில் ஆசானின் திகைப்பு...

அன்று
   மன்னன் மக்களுக்கு
கொடுத்ததால் - அது
   மன்னர் ஆட்சி...!

இன்று
  ஆட்சி செய்பவர்கள்
மக்களிடம் எடுப்பதால் – இது
   மக்கள் ஆட்சி...!

Tuesday, 18 February 2014

தேர்தல் களம்

வலது கண்
     துடித்ததாம்
வெற்றி நமக்கென
    வலம் வந்த பாதையெங்கும்
வறுமையை
    விதைத்ததுவிட்டு...!

விதைக்காமல்
     அறுக்க நினைக்கும்
வணிகத்தை தாண்டியும்
     வளர்ந்து வருகிறது
வான் முழுவதும்
      நிறைந்து விட்ட
அதிர்வலைகள்...!

வானில் உதிக்கின்ற
      பகலவனையும்
துரத்து விண்மீனாய்
     காட்டிக் கொள்ள - எங்கோ
விட்டு விட்டு
     எறிகிற ஒளி விளக்கையும்
விடிவதற்குள்
    அணைத்துவிட...!


தேரினிலே பவனி
      இன்றும் - தேர்ந்தெடுத்தவன்
தெருவிலிருக்க -
      என்றோ  எங்கோ
தொலைத்துவிட்ட
      சமத்துவம் இன்று
சரித்திரப் பதிவுகளில்
      மட்டுமோ?...!