Saturday, 30 November 2013

புதுமை

புதிதாய் மலர்ந்திருந்த
      மலர் சூடிக்கொண்ட
புன்னகை…!

மண்ணுக்குள் மூச்சிமுட்டி
       புதைந்திருந்த விதையின்
முதல் தளிர்தல்…!

வீசுகின்ற புயல் காற்றில்
        கரை தொட்டுவிட்ட
துடுப்புகளின் நிம்மதி…!

புதிதாய் பொங்குகின்ற
       நீறுற்றில் பெற்றுக்கொண்ட
புத்துணர்வு…!

Monday, 25 November 2013

வீரம்

பிறந்தது
      சதை பிண்டமானாலும்
வாள் கொண்டு
      கிழித்து புதைத்த
மரபு...!

உடன் பிறப்புகளின்
      உதிரம் சிதறினாலும்
உணர்வுகளில்
       உதிக்க மறந்துவிட்ட
வீரம்...!

கலங்கமற்ற தாயின்
       வாழ்வினை
கல்லிலே செதுக்கிட
       கங்கை வரை
களம் கண்ட
      வரலாறு..!

கலங்கிய பெண்மையின்
      வழக்கிலும்
வறண்டு போன
      நம் உதிரத்தின்
கொதிப்பு...!

Monday, 18 November 2013

முத்தொழில்

மூன்று முகம்
     கொண்டவனால் உருவாகி
உடல் உருமாறியவன்
      உதவியிலே
உலகில் வாழ்ந்துவிட்டு
      உடுக்கை ஏந்திவனின்
ஆட்டத்திலே அடங்கிவிடும்
      மனித கூட்டம்...!

Friday, 15 November 2013

ஆற்றுப்படுகை

ஆசையென்னும் கயிறு
      கொண்டு இழுத்து சென்ற
வென் புனல் - அதன்
      ஆணவத்தில்
விட்டு சென்ற - இதன்
       வளர்ச்சியென்னும்
வண்டல் மண்...!

எல்லையோரத்தில்
      எழுந்து நின்ற
ஆறு-கால் மண்டபம் - அங்கு
      அறைகுறையாய்
வரையப்பட்டிருந்த
      வள்ளுவரின் வரைபடம்...!

கரையெங்கும் வனப்பினை
      கூட்டியிருந்த
நீலப் பசும் பாசி - அங்கும்
      உதிர்ந்துவிட்ட சிறகென 
சிதைந்து கிடந்த
      சிறுவனின் அட்டைக் குடில்...!

கடந்து விட்ட
        மழை வெள்ளத்தில்
சிதிலம் சிதிலமென
      சிதைந்திருந்தும்
சிவன் சூடியிருக்கும்
       பிறை நிலவாய் - இவ்
ஆற்றுப்பதுகை...!

Monday, 11 November 2013

உறவுகளின் நெருக்கம்

உதடுகளில் உதிக்கின்ற
      சொற்களையும்
உள்ளத்தில் விரிகின்ற
     சுயத்தினையும்
குறைக்கின்ற துரமாய்
     இவ் உறவுகளின்
நெருக்கம்...!

தாங்கிய கரங்களை
       துளைக்காத
தடுமாறிய கால்களின்
      துணைக்கான
தோன்றலில் உணருகின்ற
     இவ் உறவுகளின்
நெருக்கம்...!