Friday, 24 May 2013

நிலம்

நிலையற்ற மனிதத்தின்
         நிழல் விழுவதும்
நிஜம் மறைவதும்
         நிலையான - இந்
நிலமகளின்
         மடியினிலே...!

வெட்டினோம்
         புதையல் அளித்தாள்
துலையிட்டோம் - உயிர்
        தாகம் தனித்தாள்
விதவையாக்கினோம்
        மறு வாழ்வு கொடுத்தாள்...!

இன்று - அவள்
      கற்பம் கலைக்கிறோம்
நம்மை
      கல்லறைக்குள் புதைக்கிறாள்...!

Thursday, 16 May 2013

உதவும் கரங்கள்

நாளை என்பது
         பயமானால்
இன்றே நம்மை
        கொன்றுவிடும்
நேற்று என்பது
        வலியானால்
வாழ்வு
        தடம் புரண்டுவிடும்...!

கனவுகள் இங்கே
        விதையாகட்டும்
கண்ணீரினை
        துடைக்கின்ற விரல்கள்
நம் விடியளாகட்டும்...!

முடியும் என்ற
       சொல்லில் முன்னோக்கவும்
வறுமை என்ற
       சொல் வறண்டு போகவும்
இணையட்டும் இந்த
       உதவும் கரங்கள்...!

Sunday, 28 April 2013

உழைக்கும் வர்க்கம்

உடல் நடுங்கினாலும்
        நடுங்காத மனதிடம்
இரத்தம் சுண்டினாலும்
       சுருங்கிடாத -  உழக்கின்ற
செல்களின் எண்ணிக்கை...!

ஊர் உறங்கும் போதே
        உதிரம் கொதிக்கத் தொடங்கி
ஊர் அடங்கிய பின்
        உறங்கச் செல்லும்
உலக மாற்றத்தின்
       துறுப்புச் சீட்டு...!

கண்ணில் வலியிருப்பதாலோ
      ஆசைகள் அதிகமிருப்பதில்லை
மானம் மட்டும்
      மனையாகி - அங்கே
அன்பு  ஆட்சிசெய்கின்ற
     ஆலயமாய் - இவ்
உழைப்பாளிகளின்
      உறைவிடம்...!

Friday, 26 April 2013

சித்திரா பெளர்ணமி

முழுமுகம் காட்டி
      வலம் வந்த
முழு நிலவு
        வழி காட்ட - அதன்
முகம் பார்த்த
         மயக்கத்தில் தலை குனிந்த
அல்லி  இருந்த      
        தாமரைக் குளம்..!

ஆலயத்தில் உச்சியில்
        ஏற்றப்பட்ட விளக்கு  - அதில்
அசைந்தாடிய
       தீப ஒளி
வீதியெங்கும் வழங்கப்பட்ட
      அன்னதானம் - அங்கே
ஆராவாரமிட்ட
       மனிதக் கூட்டம்...!

பூவாடை அணிந்திருந்த
        பூங்கலசமும்
பொன்னாடை அணிந்திருந்த
        தெய்வத் திருமகனும்
நிலவின் அழகுடன்
       போட்யிடுவதாய்
அத்தருணம்...!

Thursday, 11 April 2013

போர் வீரன்

நெஞ்சில் குத்திய
        வாள் வலிப்பதில்லை
முதுகில் குத்திய
       முகங்கள் மறப்பதில்லை...!

ஒரு நிமிடம் உறவாகி
        மறு நிமிடம் எதிரியாகும்
சிக்கலான உறவுகளில்
        வாழாது  பிறந்த
மண்ணை முத்தமிட்டு
        உயிர் துறக்கத்
துணிந்தவன்...!

தீவினைத் தருவதானாலும்
       தரத்தினை இழக்கா
வாள் முனையை
       ஏந்தி நின்று
வதைக்கின்ற
       வல்லுருக்களுக்கு
விடை கொடுத்து
        வீரு நடை போட்டவன்...!

களத்தில் உயிர் பிரிந்தாலும்
       கண்ணிமைக்குள் காத்திருந்த
உறவுக்காக அவ்
       உயிர்களின் நினைவுடன்
இறப்பவன்...!