Saturday, 15 December 2012

தேடல்


கல்வி

கண்கள் திறப்பதும்
      கலைகள் பிறப்பதும்
காவியங்கள் உருவாவதும்
      இக்கலைமக்களின் தேடல்...!

காதல்

பாசறையில்
      பணியாலனை தேடாது
அன்பில் வாழ நினைக்கும்
     ஆன்மாவின் துணைத் தேடல்...!


அனுபவம்

வாழக்கற்றுக் கொள்ள
     வழுக்கிய பாதையிலும்
சந்தோச நிமிடங்களிலும்
     சிதறிக் கிடைக்கின்ற
புதையளின் தேடல்...!


வாழ்வு

வசந்தத்தின் வருகைக்கான
      வெற்றியின் தேடல்...!

வாழ்வின் வலிமைகளிலும்
      வாழச் சொல்லும்
உண்மை உறவுகளின்
      துணைத் தேடல்...!

Friday, 7 December 2012

நிலவரம்

ஆயிரங்கள் கரைகின்றன
       ஆட்டத்தில் ஏழைகளின்
அடிவயிறு பசித்ததிருந்தாலும்...!

நாடகங்கள் நிகழ்தத்தப்படுகின்றன
        நடுத்தர மக்களின்
நரம்புத் துடிப்புகள்
        நடுக்கம் கண்டாலும்...!

ஊர் தலைவர்கள் - இங்கே
        உல்லாசத்தில்
உழைப்பின் உதிரங்கள்
        உதாசினப் படுத்த்ப்பட்டாலும்...!

மாளிகைகள் மகுடம்
       சுட்டிக்கொள்கின்றன
இரக்கமெனும்
       மாண்பிணை மறந்திருந்தாலும்...!

Friday, 30 November 2012

நிலவு

பத்து மாதம் சுமந்தவள்
         பாதி வயிறு நிறைய
பார்க்கச் சொன்ன
        அதிசயம்...!

தினம் தினம்
        தேய்ந்து வளர்ந்தாலும்
தேயாத அழகுடன்
        தொடர்கின்ற துணைவி ...!

இருள் கொண்டு வாழ்ந்தாலும்
       ஒளி கொண்டு சிரிக்கின்ற
பட்டுத் தாமரை...!

Sunday, 18 November 2012

கஷ்ட காலம்

சுடு மணலின்
        சூட்டினில் நடந்தாலும்
சுத்தமான உறவுகளை
       சூழ்ந்து நிற்க்கின்ற 
நிமிடங்களாய்...!

 சந்தோசமற்ற சறுக்கல்களில்
       மனம் சறுக்கினாலும்
மனம் விரும்பும்
        உறவுகளை உணருகின்ற
உண்மை தினங்கள்...!

 தடுமாறுகின்ற தினங்களில்
        துணை நின்றாலும்
சந்தோசத்தில் விலகி நின்று
         நம் நினைவுகளை அலசுகின்ற
நிஜ உறவுகளின்
       அறிமுக தருணங்களாய் - இந்த
கஷ்ட காலம்...!

Tuesday, 13 November 2012

தீபம்


பூசி வைத்த இருட்டுக்குள்
       புதையாத புதையளாய்
வாள் கொண்டு போராடும்
       விரனின் வீரத்தின்
சூல் கொண்டு சுடுகின்ற
       இரவுச் சுரியனாய்...!


வளத்தில் வழிகின்ற குளம்
       தன்னையே வற்ற விட்டு
தியாகத்தின்  வேராக - அதில்
      வளர்க்கின்ற விருச்சமாய்
இந்த தீப ஒளி...!