எண்ணத்தின் சிதறல்கள்
மண்ணுக்குள் புதைக்காதவனாய்...
Monday, 24 February 2014
வாழ்வு வளம் பெற
ஒரு மாணவன் தன்னிடம் கேட்கப்ப
ட்
ட கேள்விக்கு அவன் கூரிய உண்மையில் ஆசானின் திகைப்பு...
அன்று
மன்னன் மக்களுக்கு
கொடுத்ததால்
-
அது
மன்னர்
ஆட்சி
...!
இன்று
ஆட்சி
செய்பவர்கள்
மக்களிடம்
எடுப்பதால் – இது
மக்கள்
ஆட்சி
...!
Tuesday, 18 February 2014
தேர்தல் களம்
வலது கண்
துடித்ததாம்
வெற்றி நமக்கென
வலம் வந்த பாதையெங்கும்
வறுமையை
விதைத்ததுவிட்டு...!
விதைக்காமல்
அறுக்க நினைக்கும்
வணிகத்தை தாண்டியும்
வளர்ந்து வருகிறது
வான் முழுவதும்
நிறைந்து விட்ட
அதிர்வலைகள்...!
வானில் உதிக்கின்ற
பகலவனையும்
துரத்து விண்மீனாய்
காட்டிக் கொள்ள - எங்கோ
விட்டு விட்டு
எறிகிற ஒளி விளக்கையும்
விடிவதற்குள்
அணைத்துவிட...!
தேரினிலே பவனி
இன்றும் - தேர்ந்தெடுத்தவன்
தெருவிலிருக்க -
என்றோ எங்கோ
தொலைத்துவிட்ட
சமத்துவம் இன்று
சரித்திரப் பதிவுகளில்
மட்டுமோ?...!
Saturday, 15 February 2014
இயல்பு
வண்ணத்துப் பூச்சியின்
இறகுகளிள் இயல்பாய்
வார்க்கப்பட்டிருந்த
வண்ணத் திறல்...!
பூக்கள் தன்னில்
சுமந்துகொண்ட
பனித்துளியின்
இயல்பான அழகு...!
வெண் புறாக்களின்
இறகுகளில்
குடி கொண்டிருந்த
மென்மை...!
நேர்மையின் கருவறையை
வாழச் செய்ய
நிஜ மகனையும்
வதைத்து நின்ற
மனித இனம்...!
இவ் இயற்கையான
படைப்புகளின் இயல்பினில்
இருத்தி வைக்கப்பட்ட
அழகினை -- மறக்க
செய்யும் மனிதத்தின்
செயற்கை வாழ்வு...!
Wednesday, 5 February 2014
மீனாட்சி ஆலயம்
நீண்டு
நெடுந்திருந்த
தாழ்வாரம்
அங்கே
செதுக்கிவைக்கப்பட்ட -
தமிழ்
வீரப்
பரம்பரை
...!
வழியெங்கும்
ஒலித்திருந்த
கீதை
-
அங்கும்
தாயவளின்
தோழியான
கிள்ளைகளின்
கீச்சுக்குரல்
...!
தண்ணீரில்
-
மிதக்கின்ற
நிலவொளியில்
முகம்
பார்க்கும்
வெண்
புறாக்கள்
...!
பளிங்கிக்
கற்களிளே
பொரிக்கப்
பட்ட
பிறைமுடி
சூடியவனும்
சக்தியாய்
உருவானவளும்
...!
எத்தனை
ஆண்டுகளோ
இத்தனை
எழில்மிகு
சிற்பங்களின்
வர்ணனைக்கு
...!
எத்தனை
மானுடமோ
உளியெனும்
ஆயுதத்தில்
-
இவ்
உலக
அதிசயத்தை
உருவாக்கியது
...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)