Friday, 28 December 2012

கிருஸ்துமஸ்

 திகைக்கின்ற இருட்டுக்குள்
       தீமைகள் பரவியிருக்க
வாழ்விற்க்கு வழிகாட்டும்
       ஒளி பிறந்த நன்நாள்...!

கண்-பார்வை குறைபாட்டினில்
       கலங்கிய கன்னித்தாயினுடைய
கலக்கங்கள் கரைந்த
        காலைப் பொழுதினில்...!

தேவதைகள் வழி காட்ட
        தொழுவத்தில் பிறந்தாலும்
திளைக்கின்ற ஆனந்தத்தில்
       அறிமுகப் படுத்தப்பட்ட
நாயகன்...!

சிலுவையில் அறையப்பட்டாலும்
         அடிமை அல்ல
ஆணைக்கு அடி பணியா
         ஆருயிர்க் காவலன்...!

அன்பினில் வாழ்ந்து
        இருள் விலக - அன்றே
ஆலயத்தில் ஏற்றப்பட்ட
        அகல் விளக்கு...!

No comments: