Friday, 21 December 2012

நீரோடை

நீரின் சல சலப்பில்
         சிதறுகின்ற அமைதி
மெல்ல மெல்ல கரை
          தொட்டு செல்லும்
அன்பினில் - தன்னையே
          அற்ப்பனிக்கின்ற
அணைக் கரைகள்...!

ஓடுகின்ற நீரின்
          ஓட்டத்தில்
ஒட்டி வாழாமல்
           துரம் குறைக்க
துள்ளிக் குதிக்கின்ற 
          மீன்களின் ஆராவாரம்...!

எங்கோ பிறிந்த
           நினைவுகளில்
நீண்ட துரம் கடந்து
         கலக்கின்ற நொடிப் பொழுதினில்
கிளை நதிகளின்
           கிறுக்கள் மொழிகள்...!

நள்ளிரவில்
            நிலவு பயணிக்கின்ற
பல்லக்காகி  நம்
             பார்வையில் படர்கின்ற
பசுமையின் பிறப்பிடம்...!

No comments: