Friday, 11 May 2018

இருள் உலகம்

அரை நிலவும்
        அன்றதனை
சூழ்ந்து நின்ற
         நட்சத்திர ஒளியும்
சலவைக்கல் பதித்த
        மதில் சுவராய்
இரவென்னும்
         கோட்டையில்...!

இடைவிடாது
        பொழிகின்ற
பனித்துளியும் - அப்
        பகலவன்
விட்டு சென்ற
       கதகதப்பை
இறகுக்குள்
       இருக்கிக்கொண்ட
பறவைக்
       கூட்டமும்...!

மெல்ல மெல்ல
       ஸ்பரிசம்
தொட்டு சென்ற
       தென்றலும் - அங்கே
மென்மையை
        மெருகேற்றும்
தென்னையின்
       கீற்றுக்கிடையேயான
ஒளி முறிவும்
       அழகாகிற்று - இவ்
இருள் உலகை...!

Saturday, 17 February 2018

திரிபு

அணிந்து வந்த
        நாகரீக வேடமும்
மறந்துவிட்ட
       மனித மாண்புகளும்
மிருகம் ஆக்கிற்று
      அன்று அவரை...!

தன் தோழியுடன்
      விளையாட்டில்
தொலைந்து போய்
      தன்னை அறியாது
அவர் மேல்
      விழுந்ததில்
தூக்கி ஏறியப்பட்டு
       துடி துடித்த
நாய் குட்டி...!

வர்ணனைகள்
     கலைந்த முகம்
கண்களில்
     வழிந்தோடிய கண்ணீர்
துடிக்கின்ற
      தன் தோழனை
வாரி அனைத்துக்கொண்ட
     சிறுமி...!

அன்று வாடிய கொடிக்கு
       தேர் கொடுத்தோம்
இன்று சலவை செய்த
      ஆடைக்குள்
அழுகிய மனங்கள்
      வளர்க்கிறோம்
நாகரீகம்
     என்று சொல்லி...!

Saturday, 25 November 2017

மண்ணுலகம் (ம) பூமி

பகலவனை
       பிரிந்தாலும்
இட வலமாய்
       சுழன்றாலும்
இருள் பகலாய்
       தொடர்ந்தாலும்
 ஊன் உயிர் வாழும்
       கருவறை நீ...!

நிலமும்
      நீலக்கடலும்
இம்மலையும்
      காடுகளும் - அவ்
வறண்டு விட்ட
      வனங்களும்
நீ உடுத்திய
      வண்ண உடைகள்...!

ஆழ்கடலென
       தாழ்வதும்
இமையமாய்
     வளர்வதும்
அக்னியாய்
      எரிப்பதும்
சூறாவளியாய்
       சுழல்வதும்
கார்மேகமாகி
       பொழிவதும்
உந்தன் சமநிலையின்
       வெளிப்பாடு...!

விழுந்தாலும்
       இங்கேயே
விதைக்கப்பட்டவர்களாய்
       வாழ்கிறோம்
உந்தன்
      கண்ணிமைக்குள்...!

Friday, 9 June 2017

மண்தான் நமது பலம்

அன்னமிட்ட தாயின்
       கருவறை அறுக்கும்
அரங்கேற்றம் - இன்று
      கதிராமங்கலத்தில்...!

கண்ணிருந்தும்
      குருடனாய் - நாம்
வரவேற்கும் மற்றுமொறு
       சோமாலியா
 என்றோ
       விலைப்போன
  நம் ஒற்றை
       துருப்புச்சீட்டால்…!

மண்தான்
      நமது பலம்
அச்சடித்த
     காகிதமல்ல
காலத்தே
      பொழிகின்ற மழைதான்
நமது  வளர்ச்சி
      மாற்றமே  உருக்கொண்ட
அட்டவணையில்
      மேலெழுவதல்ல…!

Saturday, 3 June 2017

நடை வண்டி

ஒளித்துகள்கள்
       அங்கு திரையிட
சந்திரத் தென்றல் என
       பொறிக்கப்பட்ட
மைல் கல் - அருகிலே
        தலை நிமிர்ந்து
கொக்கரித்த சேவல்...!

தெருவெங்கும்
        அராவாரம்
திண்ணைதோறும்
       முதியவர் கூட்டம்
திசையரியா
       மழலையின்
முகம் நனைத்த
       கண்ணீர் துளி...!

முகம் பார்ப்பதற்குள்
       முழுதாய் நேசித்தவள்
ஓடிவந்து
       விட்டுச் சென்ற
 நடை வண்டி...!

பகலவனை கண்ட
      பனித்துளியாய்
தொலைந்து போன
      கண்ணீர் துளியும்
நடை பழகிய
     கால்களில்
வலுத்துவிட்ட  உற்ச்சாகமும்...!