Thursday, 20 June 2013

திருத்தங்கள்

நெருப்பினில் வைத்து
       நெருடிய விரல்களின்
வடுக்களில் வந்த
       திருத்தங்கள்...!

தடுமாறி கீழே
      விழுகையில்
சரீரத்தில் ஏற்பட்ட
      திருத்தங்கள்...!

பலமாக வேண்டியவை
       பலவீணமாகையில்
மனவலிமையில் உருவான
       திருத்தங்கள்...!

சூழ்ந்து நின்ற
       சுற்றமும் நட்பும்
சுத்திகரிக்கப்பட்டு -  நம்
       இயல்பில் உருமாறிய
திருத்தங்கள்...!

திருத்தங்கள்
        தீர்வதில்லை
தினம் தினம் வருகிற
        திகைப்புகள்
தீரும் வரை...!

Saturday, 8 June 2013

எழுகிற சுரியன்

வானம் விரிய
     வங்கக் கடல் கொதிக்க
எழுந்தது - இந்த
     எரிகிற கோளம்
உலக இயக்கத்தை
     எழுப்புவதற்க்கு...!

பூக்கள் மலர்வதும்
    புன்னகை பூப்பதும் - உந்தன்
அன்பென்னும்
    ஆற்றுப்படுத்திய உஷ்ணத்தில்...!

பரவட்டும்
    உடல் முழுவதும்   
உடல் பிரிகிற இறகில்
         இயற்கையை இரசித்திருக்க...!

Sunday, 2 June 2013

எல்லை புரம்

சில்லென்று சிதறிய
         பனித்துளியில் முகம்
சிலிர்த்த
         பனிப் பூக்கள்...!

நீர் திவளையில்
         சிதறிய ஒளி - அதில்

வானத்தில் வரையப்பட்ட
         ஓவியம்...!

ஊர் காவளுக்காக
         காட்டுக்குள்ளே வைக்கப்பட்ட
அய்யனார் - அங்கு
         எட்டு நான்கில்
எழுந்து நின்ற
          வெண் குதிரை...!

வீதியெங்கும் விதைக்கப்பட்ட
         வெள்ளைப் பூக்கள் - அங்கே
 தோள்களின் வலிமையில்
         வலம் வருகின்ற
எல்லைக் காவலன்...!

Friday, 24 May 2013

நிலம்

நிலையற்ற மனிதத்தின்
         நிழல் விழுவதும்
நிஜம் மறைவதும்
         நிலையான - இந்
நிலமகளின்
         மடியினிலே...!

வெட்டினோம்
         புதையல் அளித்தாள்
துலையிட்டோம் - உயிர்
        தாகம் தனித்தாள்
விதவையாக்கினோம்
        மறு வாழ்வு கொடுத்தாள்...!

இன்று - அவள்
      கற்பம் கலைக்கிறோம்
நம்மை
      கல்லறைக்குள் புதைக்கிறாள்...!

Thursday, 16 May 2013

உதவும் கரங்கள்

நாளை என்பது
         பயமானால்
இன்றே நம்மை
        கொன்றுவிடும்
நேற்று என்பது
        வலியானால்
வாழ்வு
        தடம் புரண்டுவிடும்...!

கனவுகள் இங்கே
        விதையாகட்டும்
கண்ணீரினை
        துடைக்கின்ற விரல்கள்
நம் விடியளாகட்டும்...!

முடியும் என்ற
       சொல்லில் முன்னோக்கவும்
வறுமை என்ற
       சொல் வறண்டு போகவும்
இணையட்டும் இந்த
       உதவும் கரங்கள்...!