எழுந்து வா தமிழா
எழுந்து வா...!
உனக்காக
அழுகின்ற கண்கள்
உந்தன் வீரம்
பேசும் தூரம்
வெகு தொலைவில்
இல்லை...!
ஏந்திய தழும்புகள்
காலம் தாண்டியும்
உன்னில் உறைகின்ற
போராட்டக் குணத்தின்
காலச் சுவடுகள்...!
பகையினை
மறந்துவிடு - அது
சுயநலத்தின்
உச்சம் - நீயோ
நற்சமுதாயத்தின்
விருச்சம்...!
எழுந்து வா தமிழா
எழுந்து வா...!
No comments:
Post a Comment