உணர்வுகளில்
இணைந்துவிட்ட நெஞ்சங்கள்
உருவம் கொடுக்க
நினைவிலிருந்து நீங்காத
அறப் போர்...!
மண் சார்ந்த
மரபுகளை
மீட்டெடுக்க
எழுச்சிக் கொண்ட
சமூகம்...!
பொதுவுடைமைகள் - இங்கு
உடைக்கப்படவில்லை
அரியணையின்
இறுகிய மனங்கள் மட்டும்
கரைக்கப்படுகின்றன...!
அன்றாடம் வாழ
வழி செய்தவனின்
வீழ்ச்சி - இங்கு
வேண்டாமென
வலுக்கின்ற
போராட்டம்...!
No comments:
Post a Comment