Friday, 30 November 2012

நிலவு

பத்து மாதம் சுமந்தவள்
         பாதி வயிறு நிறைய
பார்க்கச் சொன்ன
        அதிசயம்...!

தினம் தினம்
        தேய்ந்து வளர்ந்தாலும்
தேயாத அழகுடன்
        தொடர்கின்ற துணைவி ...!

இருள் கொண்டு வாழ்ந்தாலும்
       ஒளி கொண்டு சிரிக்கின்ற
பட்டுத் தாமரை...!

Sunday, 18 November 2012

கஷ்ட காலம்

சுடு மணலின்
        சூட்டினில் நடந்தாலும்
சுத்தமான உறவுகளை
       சூழ்ந்து நிற்க்கின்ற 
நிமிடங்களாய்...!

 சந்தோசமற்ற சறுக்கல்களில்
       மனம் சறுக்கினாலும்
மனம் விரும்பும்
        உறவுகளை உணருகின்ற
உண்மை தினங்கள்...!

 தடுமாறுகின்ற தினங்களில்
        துணை நின்றாலும்
சந்தோசத்தில் விலகி நின்று
         நம் நினைவுகளை அலசுகின்ற
நிஜ உறவுகளின்
       அறிமுக தருணங்களாய் - இந்த
கஷ்ட காலம்...!

Tuesday, 13 November 2012

தீபம்


பூசி வைத்த இருட்டுக்குள்
       புதையாத புதையளாய்
வாள் கொண்டு போராடும்
       விரனின் வீரத்தின்
சூல் கொண்டு சுடுகின்ற
       இரவுச் சுரியனாய்...!


வளத்தில் வழிகின்ற குளம்
       தன்னையே வற்ற விட்டு
தியாகத்தின்  வேராக - அதில்
      வளர்க்கின்ற விருச்சமாய்
இந்த தீப ஒளி...!

Saturday, 3 November 2012

படியில் பயணம்

தொடர்வண்டியில் தொங்குகின்ற
      ஊஞ்சலாய் நீ - உன்னை
தொட்டிலிட்ட தேவதையின்
      உதிரம் உரைந்து
போகுமென்பதை உணராமல்...!

எதனை மயக்க
      இந்த மயக்கம்
மடியில் சுமந்தவளை
      மரணப் படுக்கைக்கு
கொண்டு செல்ல...!

அவள் செலவழித்த
       நிமிடங்களை
திருப்பித் தர நினைக்காத
      நினைவுதான் ஏனோ...!

பெற்றதனைத்தும்
      அவர்களின் கொடை
அற்ப்ப ஆசைகளுக்காக
     அந்தரத்தில் ஆடுகின்ற உயிரல்ல அது
கண்ணிமைக்குள் காத்து வந்த
     அவர்களின் கருவிழி...!