Saturday, 28 January 2017

எழுந்து வா

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

உனக்காக
        அழுகின்ற கண்கள்
உந்தன் வீரம்
        பேசும் தூரம்
வெகு தொலைவில்
         இல்லை...!

ஏந்திய தழும்புகள்
       காலம் தாண்டியும்
உன்னில் உறைகின்ற
      போராட்டக் குணத்தின்
காலச் சுவடுகள்...!

பகையினை
       மறந்துவிடு - அது
சுயநலத்தின்
      உச்சம் - நீயோ
நற்சமுதாயத்தின்
      விருச்சம்...!

எழுந்து வா தமிழா
        எழுந்து வா...!

Friday, 20 January 2017

உரிமை போராட்டம்

உரிமைகள் மறுக்கப்பட்ட
      உணர்வுகளில்
இணைந்துவிட்ட  நெஞ்சங்கள்
      உருவம் கொடுக்க
நினைவிலிருந்து நீங்காத
      அறப் போர்...!

மண் சார்ந்த
     மரபுகளை
மீட்டெடுக்க
     எழுச்சிக் கொண்ட
சமூகம்...!

பொதுவுடைமைகள் -  இங்கு
       உடைக்கப்படவில்லை
அரியணையின்
        இறுகிய  மனங்கள் மட்டும்
கரைக்கப்படுகின்றன...!

அன்றாடம் வாழ
      வழி செய்தவனின்
வீழ்ச்சி  - இங்கு
      வேண்டாமென
வலுக்கின்ற
        போராட்டம்...!