எளிமையும்
அழகு சேர்க்கும்
ஏழையின் கனவுகளும்
ஏற்றம் பெறும்
என வாழச்
சொன்னவரே
வாழ்ந்து
முடித்தவரே...!
உந்தன்
முகம் பார்த்து
மாணவர்களின்
உள்ளம் கொண்ட
மகிழ்ச்சியே
நீங்கள்
சூடிக் கொண்ட
மணி மகுடம்...!
உங்கள்
மனஎழுச்சியில்
எழுந்து நின்ற
ஏவுகணைகளும்
கண் விழித்தே
வலம்வரும்
விண்கலத்திற்கும்
கருப்பு திரை
விரித்து
நடத்தி விட்ட
அணு குண்டு
சோதனைகளும்...!
நீங்கள்
விட்டு சென்ற
அக்னியின் சிறகுகள்
என்றென்றும் - எங்கள்
நம்பிக்கையின்
ஆரம்பப் புள்ளியாய்...!
பல ஓளியிலிருந்து
ஓரொளி நீங்கள்
சேர்த்து வைத்த
பொக்கிஷம் - உங்கள்
ஓர் ஒளியால்
தூண்டப்பட்ட
உணர்வுகளிலே இங்கு
நாங்கள்...!
இன்று நாடே
சிந்துகின்ற
கண்ணீர் துளிகள்
கூறும் - நீங்கள்
பாரதத்தை
அலங்கரித்த
உண்மையான
தலை மகனென்று...!
எங்கு சென்றாலும்
தாய் மொழியை
நெஞ்சில் சுமந்து
நின்றவரே - உங்கள்
உடல் பிரிந்தாலும்...!
நீங்கள்
விட்டு சென்ற
உணர்வுகள்
இம்மண்ணின்
தரமான
நினைவுகளாய்
என்றென்றும்...!
Thursday, 30 July 2015
Thursday, 2 July 2015
விடியும் வரை
நட்சத்திரங்களை
கோர்த்து
சென்ற
மின்னல் கீற்று...!
வட்டமிட்டு
நான்கு திசையும்
பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!
மெல்ல மெல்ல
வீசிய காற்றினில்
மிதந்து வந்த
மெல்லிசை...!
உருகும் பனி
உரு கொடுக்க
புன்னகைக்கின்ற
புதுப் பூக்கள்...!
இருள் குடித்தும்
ஒளி வீசத்
தொடங்கிய
காலைக் கதிரவன்...!
விழுந்த பின்
எழுந்தாலும்
இறகுக்கு
வலுவூட்டி
பறக்கின்ற
சிறு பறவை...!
கோர்த்து
சென்ற
மின்னல் கீற்று...!
வட்டமிட்டு
நான்கு திசையும்
பறந்து சென்ற
வெண் புறாக்கள்...!
மெல்ல மெல்ல
வீசிய காற்றினில்
மிதந்து வந்த
மெல்லிசை...!
உருகும் பனி
உரு கொடுக்க
புன்னகைக்கின்ற
புதுப் பூக்கள்...!
இருள் குடித்தும்
ஒளி வீசத்
தொடங்கிய
காலைக் கதிரவன்...!
விழுந்த பின்
எழுந்தாலும்
இறகுக்கு
வலுவூட்டி
பறக்கின்ற
சிறு பறவை...!
Subscribe to:
Comments (Atom)