Friday, 17 October 2014

கற்பனை

நிழலுக்கும்
     நிஜத்திற்குமிடையில்
வளருகின்ற
     விருச்சம்
இயல்புக்கும்
     இச்சைக்குமிடையில்
தோன்றி மறையும்
      கனவு...!

வரையறை தாண்டிய
      வெள்ளப் பெருக்கு
ஆட்கொள்ளும்
      இருளைப் போல் - இதன்
வளர்ச்சிக்கு
      குறைவிருப்பதில்லை
விடிகின்ற வெளிச்சமும்
      உணர்ந்துவிட்‌ட 
உண்மை - நம்மை
     விடுவிக்கும் வரை...!

கண்விழிக்கும்
      சிறு குழுந்தையின்
அறியாமையானாளும்
      அடைகின்ற
ஆனந்தத்தை போல் - இக்
       கற்பனையின்
சிறகுகளுக்கு
       வலிப்பதில்லை - அவ்
வான்முழுவதும்
       விரிந்தபின்னும்...!

No comments: