மாவிலையில்
கட்டிவைத்த தோரணமும்
மாவிளக்கில்
ஏற்றிவவைத்த தீபமும் - அதில்
தீய்ந்துபோன
திரிகளின் வாடை
காற்றில்
மிதந்திருக்க...!
மஞ்சள் முக
நாயகியும் நாயகனும்
பொன்னிற ஆடையில்
பூமேடையில்
மனம் புரிய
அமர்ந்திருப்பதாய்
கட்டிவைத்த காட்சி...!
ஆலய மணியோசையும்
ஆராத்தியும்
ஒன்று சேர்ந்து
குலம் வாழச் சொல்லி
வணங்கி நிற்கும்
மனித இனம்...!
எரிந்த நெய்
விளக்குகள்
விட்டுச் சென்ற
சூழ்நிலையும்
திகைக்காத
நினைவலைக்குள்
சிக்கித் தவிக்கும்
மனங்களும் - திகைப்பில்
திவ்ய நிலைக்கு
சென்று வர - அன்றே
செதுக்கி வைத்த
செல்வமாய் - அச்
சிவாலயம்...!
No comments:
Post a Comment