நீல வானம்
நில மகளின்
மீது கொண்ட
காதலின் பரிமாற்றத்தில்
மழை அங்கே
வலுத்திருக்க...!
மித வேகத்து
மின் தொடர் வண்டி
குறுக்கிட்டதில்
முகம் நனைத்த
மழைச் சாரல்...!
முகத்தின்
பிரதி பிம்பத்தை
முத்துக்குள் சுமந்து
கொண்ட இலைகளும்
மௌனத்தின் அழகினை
முழுமையாய்
சூடிக் கொண்டிருந்த - அவ்
அந்தி வானம்...!
எடுக்க எடுக்க
குறையாத எண்ணங்களும்
அழித்தாலும் அடைந்தாலும்
தேய்ந்துபோகா ஆசைகளும்
கரைந்து போக
தோன்றிய தோற்றமாய் - அக்
காரிருள் பொழுது...!
No comments:
Post a Comment