திகைக்கின்ற
திசையறியா பாதையிலும்
உறைகின்ற
பனியிலும்
துப்பாக்கி முன்னே
உயிர் துறந்தும்
உயிர் சுமப்பவளை
காத்து நிற்கும்
காவலர்கள்
ஒரு புறம்...!
கல்லறையின்
கனவு கண்டாலும்
தாய் மடி தேடும்
பிஞ்சுகளை
புதைக்குழுயிலிடும்
பாதையில்லா
பைத்தியக்காரர்கள்
மறு புறம்...!
தன் மக்களின்
உணர்வுகளின் வலியை
உரக்க கூறி நின்ற
தலைமகனின்
உருக்கக் குரல்
ஒறு புறம்...!
மகவுகளை இழந்தாலும்
நிகழ்வுகளின் உண்மையை
உணர்வதற்குள்
அடி மனத்தில்
பகையினில்
தீவைக்கின்ற
திட்டக் குழு
மறு புறம்...!
ஆயுதம் ஏந்திய
அரக்கர்களே
தேடுங்கள் புதுத்
தீவுத்திடலை
உங்களில் பெரியவரை
கண்டெடுக்கும்
போர்க்கலமாய்....!
தீய்மைக்கு தண்டனை
தீமையென்றால்
நீங்கள் திரும்பும்
திசையெங்கும்
தணல் காடாகும்
வரம் பெற்றவர்கள்...!
வாழ விடுங்கள்
வாழப் பிறந்தவர்களை...!
No comments:
Post a Comment