நீண்ட நாட்களுக்கு பிறகு அன்பினை அழகாய் காட்ட நினைத்த கலைஞனின் தரமான படைப்பு குக்கூ..
அன்பின் அழகு
அழிவதில்லை - அது
அழுக்கு ஆடை
மனிதர்களில்
ஓட்டிக் கொண்டாலும்...!
விரசமில்லா விருப்பத்தின்
உன்னத உணர்வுகளை
காண்பித்த விடியல்
அழகின் விலை பேசும்
திரையிடல்களின்
மத்தியில்...!
அன்பின் உறவுகள்
உறுத்துவதில்லை - அது
உதவுகின்ற உணர்வில்
உருவாகிவிட்டதால்...!
இங்கு
அழிக்க நினைப்பது
ஆசையானாலும்
ஆதரிப்பது அன்பினில்
உருவாகும்
ஆசிர்வாதங்களே..!
Friday, 28 March 2014
Friday, 21 March 2014
நிம்மதி
நீண்ட துரம்
பயணிக்கின்ற பாதையில்
நினைவுகள் இளைப்பாற
தேடுகின்ற
நிழலாக
நிம்மதி...!
சேர்த்துவைத்த
பொருட்களில்
தொலைந்து
போனாளும்
பிறருக்காக
செலவழிந்த
நிமிடங்களில்
நிலைத்திருக்கும்
நிம்மதி...!
எவருக்கோ
கிடைத்தது
எனக்கென எழுகின்ற
எண்ணத்தில் - நம்மிலிருந்து
எடுத்தெரியப்பட்டாலும்
வாழ்வின்
இயல்புகளை
ஏற்றுக்கொண்டு
முன்னோக்கி
செல்லும்
முயற்சியில் - ஓடி வந்து
நம்மில்
ஒட்டிக்கொள்ளும்
நிம்மதி...!
Wednesday, 12 March 2014
விழுவதும் இங்கு எழுவதற்கோ!
விழுந்த
விதை
மண்ணில்
முட்டி
மரமாகியது...!
விழுந்த
மழை
பூமியின்
தாகம்
தணித்தது...!
விழுகின்ற
கண்ணீர்
வலியின்
வேதனையை
விட்டொழிக்கிறது...!
விழுகின்ற
குழந்தை
எழுகையில்
- அன்னையுடைய
நம்பிக்கையின்
நரம்புகளுக்கு
உயிரூட்டுகிறது...!
விழுவதும் இங்கு
எழுவதற்க்கோ!
வாழ்வின்
விட்டுபோன
பக்கங்களை
வீசிய காற்றிலாவது
புறட்டிவிட்டு – அக்
காற்று கூட
அதிர்ந்துபோக - நம்
வாழ்வுக்கு
வளுவூட்டிக் கொள்ள...!
Friday, 7 March 2014
அஞ்சரைப் பெட்டி
கேட்டது எதுவானாலும்
அவள் கேட்க மறுக்கா
ஆயுதமாய் அறுசுவையை
கூட்டவல்ல - இவ்
அஞ்சரைப்
பெட்டி...!
மண் கூட்டி
விளையாடும்
சிறுமிகளும் மறக்காமல்
சித்தரிக்கும்
மணி மகுடம் - இவ்
அஞ்சரைப் பெட்டி...!
மாடி வீட்டு
ஜன்னல் வழியும்
ஓலை வீட்டு
வாசல் வழியும்
வேற்றுமை இல்லாது
வீசுகின்ற வாசனையின்
சொந்தக்காரன்
- இவ்
அஞ்சரைப் பெட்டி...!
அயிரம்
மைல் தாண்டினாலும்
அன்னையின்
கைதேர்ந்த - அவள்
அன்பினில்
அரைத்தெடுத்த
கலவையை அலுக்காமல்
சுமந்து
செல்லும் - இவ்
அஞ்சரைப் பெட்டி...!
Subscribe to:
Comments (Atom)